Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜடேஜா நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. தோனியால் சோகம்! சென்னை ரசிகர்கள்தான் காரணம் - என்ன பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2 வது சுற்று லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் வழங்கும் வரவேற்பு பலரை உற்சாகப்படுத்தினாலும், சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் அது புலம்ப வைத்து இருக்கிறது.

கடந்த மார்ச் 31 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் தொடங்கிய இந்த தொடரில் தற்போது 2 வது லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Ravindra Jadeja upset on Dhoni fans celebration while his dismissal in IPL

ஒவ்வொரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முதல் 4 இடங்களை பிடிக்க போராடி வருகின்றன. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு சமனுடன் 13 புள்ளிகளை பெற்று 2 வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வது இடத்திலும் உள்ளன.

கொல்கத்தா அணி 5 வது இடத்திலும், பெங்களூரு 6 வது இடத்திலும், பஞ்சாப் அணி 7 வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 8 வது இடத்திலும், ஹைதராபாத் அணி 9 வது இடத்திலும் டெல்லி அணி 10 வது இடத்திலும் உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி இருக்கும் 11 போட்டிகளையுமே தோனிக்காக ரசிகர்கள் படை திரண்டு சென்று பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளை உள்ளூர் ரசிகர்கள் திரண்டு சென்று பார்ப்பது மட்டுமின்றி, பிற மாநிலங்களில் சிஎஸ்கே விளையாடும் மைதானங்களும் சென்னை மைதானங்களை போன்றே காட்சி தருகின்றன. அந்த அளவுக்கு தோனியின் ஒவ்வொரு நகர்வையும் ரசித்தும், அவரது சிக்சர்களுக்கு சில்லரைகளை சிதற விடுகின்றனர் ரசிகர்கள். சென்னை விளையாடும் போட்டிகளின் டிக்கெட்டுகள் சில நொடிகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

சென்னை அணி இதுவரை விளையாடிய அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் என பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தோனிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடையுடன் ஆர்ப்பரிப்பதை காண முடிகிறது. இதுவே தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் என்ற பேச்சு உள்ள நிலையில், ரசிகர்கள் கடந்த ஆண்டுகளை விட இம்முறை அதிகளவில் சென்னை போட்டியை காண வருகின்றனர்.

இது சென்னை ரசிகர்களையும், சிஎஸ்கே அணியையும் வெகுவாக உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஒருவரை தவிர. அவர்தான் ரவீந்திர ஜடேஜா. அதற்கு காரணம் தோனியின் வெறித்தனமான ரசிகர்கள்தான். இந்த சீசனில் தோனி கடைசி 3 ஓவர்களில் இறங்கி சில சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதனை காண்பதற்கே ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை அணி தோற்றாலும் பரவாயில்லை, தோனியின் பேட்டிங்கை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறகே தோனி களமிறங்குவார். பொதுவாக தாங்கள் விரும்பும் அணியின் வீரர் ஆட்டமிழந்தால் ரசிகர்கள் அமைதியாவது வழக்கம். ஆனால், இந்த தொடரில் சென்னை வீரர் ஜடேஜா ஆட்டமிழந்தாலே ரசிகர்கள் சத்தம்போட்டு கொண்டாடத் தொடங்கி வருகின்றனர்.

இதற்கு காரணம், அடுத்து தோனி களமிறங்குகிறார் என்பதே. இதுதான் ஜடேஜா மனதை காயப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை சென்னை அணி வீரர் தீபக் சஹார் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். "தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக விளையாடிக்கொண்டு இருக்கும் வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என வேண்டுகிறார்கள். இது என்ன மாதிரியான ஆதரவு?" என்று ஜடேஜா தங்களிடம் சொன்னதாக அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+