வன்னியர் சங்கத்தில் பஞ்சாயத்து! ராமதாஸ் கொடுத்த கிரீன் சிக்னல்! அதிரடி காட்டிய பு.தா.அருள்மொழி!
சென்னை: வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ரவிராஜை விடுவிப்பதாக அறிவித்துள்ளார் பு.த.அருள்மொழி.
அதுவும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருக்கிறார் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி.

மஞ்சள் படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் வன்னியர் சங்கம் சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி மாற்றம் அரங்கேறியுள்ளது.
சென்னை கிண்டியை அடுத்த பட் சாலையில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த இடம் தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் கூட வருவாய்த்துறைக்கு கண்டனம் தெரிவித்து வன்னியர் சங்கம் அறிக்கை விடுத்திருந்தது.
வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ரவிராஜும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனைப்படி அந்த நிலப் பிரச்சனையை எதிர்கொண்டு வந்தனர். அதேபோல் 2,000 இளைஞர்களை திரட்டி மஞ்சள் படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் மும்முரம் காட்டினர்.

இந்தச் சூழலில் தான் வன்னியர் சங்க பொறுப்பிலிருந்து ரவிராஜ் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் ராமதாஸ் இருப்பதை, பு.தா.அருள்மொழி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே சுட்டிக்காட்டியுள்ளர். அதாவது அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''திருவள்ளூர் மாவட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோ.இரவிராஜ் அவர்கள் வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து இன்று முதல் ( 25.8.2023 ) விடுவிக்கப்படுகிறார். வன்னியர் சங்கத்தின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications