உங்க கிட்ட வங்கி கணக்கு இருக்கா.. தேடி வரப்போகும் 'கிப்ட்'.. ஆர்பிஐ-யின் அதிரடி 2026 பிளான்
சென்னை: "சார்... உங்க பேங்க் அக்கவுண்ட் பிளாக் ஆகப்போகுது, சீக்கிரம் இந்த OTP-ய சொல்லுங்க" - இப்படிப் பேசி நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை சைலன்ட்டாக அள்ளும் ஆன்லைன் திருடர்களுக்கு இனி கஷ்ட காலம்தான். வரும் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய விதிகளின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு செம 'குட் நியூஸ்' சொல்லியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (RBI).

இது 'ஒன்ஸ் மோர்' கிடையாது... லைஃப் டைம் செட்டில்மென்ட்!
ஆன்லைன் மோசடியில் சிக்கி 50,000 ரூபாய்க்குள் பணத்தை இழந்தவர்களுக்கு ஒரு 'ஆறுதல் பரிசு' காத்திருக்கிறது. மோசடி நடந்த 5 நாட்களுக்குள் வங்கிக்கும், சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் (1930) எண்ணுக்கும் தகவல் தெரிவித்துவிட்டால், இழந்த பணத்தில் 85% அல்லது அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை இழப்பீடாகப் பெறலாம்.
ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தச் சலுகை உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே கிடைக்கும். "அப்பாடா... இனி அடிக்கடி ஏமாறலாம்" என்று நினைத்தால் அது நடக்காது பாஸ்!
உதாரணம்: நீங்கள் ஒரு போலி லிங்க்கை கிளிக் செய்து 20,000 ரூபாயை இழந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே புகார் அளித்தால், உங்களுக்கு 17,000 ரூபாய் (85%) திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதில் ஆர்பிஐ சிங்கப் பங்காக 65%-ஐ ஏற்கும்.
பேங்க் தப்பு பண்ணா... உங்களுக்கு 'ஜீரோ' கவலை!
சில நேரங்களில் வங்கி மென்பொருளில் இருக்கும் ஓட்டை அல்லது வங்கியின் அஜாக்கிரதையால் பணம் திருடு போகலாம். அப்படி நடந்தால்:
நீங்கள் புகார் அளிக்காவிட்டாலும், வங்கிதான் முழுப் பொறுப்பு.
உங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு பைசா கூட குறையாமல் 100% ரீஃபண்ட் செய்யப்பட வேண்டும்.
அதேபோல், வங்கியும் நீங்களும் சம்பந்தப்படாத 'தேர்ட் பார்ட்டி' (Third-party) திருட்டு நடந்தாலும், 5 நாட்களுக்குள் புகார் அளித்தால் உங்களுக்கு 'Zero Liability' அதாவது முழுப் பணமும் திரும்பக் கிடைக்கும்.
"இது உங்க தப்பு பாஸ்!" - எப்போதெல்லாம் வங்கி கைவிரிக்கும்?
எல்லா நேரத்திலும் ஆர்பிஐ வந்து நம்மைக் காப்பாற்றும் என்று நினைக்க முடியாது. சில 'அறிவு கெட்ட' வேலைகளைச் செய்தால் வங்கி பொறுப்பேற்காது:
OTP-ய வாரி வழங்குவது: போனில் யாரோ கேட்கிறார்கள் என்று பின் (PIN), பாஸ்வேர்டு அல்லது OTP-யைச் சொன்னால் அது உங்கள் தப்பு.
அலர்ட்டை மதிக்காதது: பேங்க் ஆப்பில் "இது மோசடியாக இருக்கலாம்" என்று சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வந்தும், அதை மீறி பணம் அனுப்பினால் வங்கி கைவிரித்துவிடும்.
மால்வேர் ஆப்ஸ்: கண்ட கண்ட லிங்க்குகளைக் கிளிக் செய்து, மர்மமான ஆப்ஸ்களை போனில் டவுன்லோட் செய்து அதன் மூலம் பணம் போனால் நீங்களே தான் பொறுப்பு.
லேட் ரிப்போர்ட்: கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது தவறான பரிமாற்றம் நடந்தாலோ உடனடியாகத் தகவல் சொல்லாமல் தூங்கிவிட்டு, ஒரு வாரம் கழித்துப் போனால் நஷ்டம் உங்களுக்குத்தான்.
இனி ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு மெசேஜ்!
இனி 500 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் டெபிட் ஆனாலும் உங்கள் மொபைலுக்கு கட்டாயமாக SMS வரும். 500 ரூபாய்க்கு கீழ் உள்ள பரிமாற்றங்களுக்கு மின்னஞ்சல் (Email) அல்லது ஆப் நோட்டிஃபிகேஷன் மூலம் வங்கிகள் தகவல் தெரிவிக்கும்.
மொத்தத்தில், டிஜிட்டல் உலகில் ஏமாறுபவர்களைக் காக்கவும், ஏமாற்றுபவர்களைத் தடுக்கவும் ஆர்பிஐ ஒரு பெரிய வலையை வீசியுள்ளது. 2026-ல் இருந்து இந்த விதிகள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஒரு கவசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications