அடிமடியில் கைவைத்த ஆர்பிஐ.. சல்லிக் காசுக்கு உதவாத தங்கம்! புதிய விதிகள் தளர்வால் எந்த பலனுமில்லை!
சென்னை: நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே வங்கி கடனாக வழங்க வேண்டும், 22 கேரட் நகைகளுக்கு மட்டுமே நகை கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியில் புதிய விதிமுறைகள் பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கும் இன்னலுக்கும் ஆளாக்கி உள்ளது. இந்நிலையில், புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என ரிசர்வ் வங்கியை நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்த விதிமுறைகள் அனைத்தையும் முழுவதுமாக திரும்ப பெறுவது தான் ஏழை மக்களுக்கு நன்மை அளிக்கும் என்கின்றனர்.
பிற நாடுகளில் தங்கம் மிகச் சிறந்த முதலீட்டு பொருளாகவும் எதிர்கால சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தங்கம் என்பது கௌரவமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அவசர தேவைக்கு உதவும் பொருளாகவே தங்கம் கருதப்படுகிறது.
மருத்துவ தேவை உள்ளிட்ட மிக மிக அவசரமான நேரங்களில் தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றி விடலாம். இந்த நிலையில் தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. குறிப்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க வேண்டும், அடமானம் வைக்கும் நபர் நகையின் உரிமையாளர் தான் என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் நகை கடன் பெறுவது மிகவும் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள் எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடியது எனவும் அதனை திரும்ப பெற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்து. அதன்படி இரண்டு லட்சத்துக்கும் குறைவான நகை கடன் பெறுபவர்களுக்கு புதிய விதிகளிலிருந்து தளர்வு அளிக்க வேண்டும், புதிய விதிமுறைகளை 1.1.2026க்கு பிறகு நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தது. இதனை ஏற்ற ரிசர்வ் வங்கி இரண்டு லட்சத்திற்கும் குறைவான நகை கடன் வாங்குவதற்கு புதிய நகை விதிகள் பொருந்தாது என கூறியுள்ளது. இருந்த போதும் இந்த விதிமுறை தளர்வாள் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்கின்றனர்.
அதாவது 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே நகை கடன் பெறுபவர்களுக்கு இந்த விதிகள் தளர்த்த பட்டு இருக்கிறது. அதற்கு மேல் நகை கடன் பெற்றால் புதிய விதிகள் தான் பொருந்தும். ஒருவேளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு நகை கடன் பெற வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய்க்குள் தான் பெற முடியும். ஒரு அறுவை சிகிச்சைக்கு தேவை ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றால் 3அல்லது 3 முறைக்கு மேல் தான், அதாவது 2 லட்சம் ரூபாய்க்குள் மூன்று முறைக நான்கு முறை நகை கடன் பெற வேண்டும். இதனால் கால விரயம் நேரம் ஏற்படும்.
மேலும் தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் கல்லூரி கட்டணம் விடுதி கட்டணம் ஆகியவற்றை செலுத்த தங்கத்தை பணமாக மாற்ற வேண்டிய நிலை பல பெற்றோருக்கு இருக்கிறது. இதனால் பெரிய அளவில் சிரமம் ஏற்படும். தற்போது அதாவது 2026 வரை இந்த விதிமுறைகள் அனைத்தையும் முழுவதுமாக நீக்க வேண்டும். அப்போதுதான் அவசர தேவைகளுக்கு மக்கள் பணத்திற்காக அலைய வேண்டிய நிலை இருக்காது. மேலும் நகையின் தரம் மற்றும் 22 காரட் நகையாக மாற்றுவதற்கும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் 2025 முழுவதும் இந்த விதிமுறைகளை அமல்படுத்தக் கூடாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications