எதிர்ப்பை மீறி உதயநிதிக்கு சீட் தர என்ன காரணம்.. பரபரப்பான பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை : கட்சியினரின் எதிர்ப்பு, பிரசாந்த் கிஷோரின் எச்சரிக்கையையும் மீறி திமுக தலைவர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார்.

அதுவும் திமுக.,வின் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் உதயநிதி மட்டுமே முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுபவர்.

இதை மற்ற கட்சிகள் வாரிசு அரசியல் என விமர்சித்தாலும் இதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

 சேப்பாக்கத்தை ஒதுக்கியது ஏன்

சேப்பாக்கத்தை ஒதுக்கியது ஏன்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, கருணாநிதி 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. மிகக் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி என்பதால் இது உதயநிதிக்கு பிளசான ஒன்று. சேப்பாக்கம் தொகுதியை உதயநிதிக்கு ஒதுக்கினால் அவர் மற்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய எளிதாக இருக்கும். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

 அதிமுக – திமுக நேருக்கு நேர் மோதல்

அதிமுக – திமுக நேருக்கு நேர் மோதல்

இதில் 10 தொகுதிகளில் அதிமுக.,வுடன் நேருக்கு நேர் மோத உள்ளது. திமுக, அதிமுக.,வுடன் 129 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக.,வுடன் 14 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகிறது. கூட்டணி கட்சிகளின் 14 இடங்களையும் சேர்த்து 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் திமுக கூட்டணி போட்டியிடுகிறது.

 ஸ்டாலினின் பிளான்

ஸ்டாலினின் பிளான்

சமீபத்தில் பிரசாரத்தில் பேசிய உதயநிதி, ஸ்டாலின் தன்னை அழைத்து தேர்தலில் போட்டியிடுகிறாயா அல்லது மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்கிறாரா என கேட்டார். நான் சீட் வேண்டாம், பிரச்சாரம் மட்டும் செய்கிறேன் என கூறி விட்டேன் என்றார். வாரிசு அரசியல் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்பதற்காக உதயநிதியை தேர்தலில் போட்டியிட வைப்பதை விட சென்னை மேயர் பதவியை அவருக்கு வழங்கவே ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

 உதயநிதிக்கு சீட் ஒதுக்கியது எப்படி

உதயநிதிக்கு சீட் ஒதுக்கியது எப்படி

அழகியின் மகன் துரை தயாநிதிக்கு முன்பாக தனது மகன் உதயநிதியை அரசியலில் கொண்டு வர வேண்டும் என உதயநிதியின் தாய் துர்கா வலியுறுத்தியதால் தான் உதயநிதிக்கு சீட் ஒதுக்கப்பட்டதாக ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அழகிரி தனது மகன் துரை தயாநிதியை அரசியலில் கொண்டு வர முயல்வதை போல், கனிமொழியும் தனது மகன் ஆதித்யா அரவிந்தனை அரசியலுக்கு கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறாராம்.

 துரை தயாநிதியுடன் போட்டி

துரை தயாநிதியுடன் போட்டி

கருணாநிதி அமைச்சரவையில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதே, அழகிரி மத்திய அமைச்சரானார். சினிமாவில் உதயநிதி ரெட் ஜெயின்ட் மூவீஸ் வைத்திருப்பதை போல், துரை தயாநிதி க்ளவ்ட் நைன் மூவீஸ் வைத்து பல படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருகிறார். இதனால் அரசியலில் துரை தயாநிதி களமிறக்கப்படுவதற்கு முன் உதயநிதியை கொண்டு வரவே 2018 ல் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட உதயநிதிக்கு, 2019 ல் திமுக இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 உதயநிதிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி

உதயநிதிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி

அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி, கூட்டணி கட்சியான பாமக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் உதயநிதி எளிதில் வெற்றி பெறுவார் என தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் உதயநிதி பிரசாரம் செய்து வருவதால், அவர் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+