10 ஆம் வகுப்பில் தோல்வியா? கவலையை விடுங்க! இன்று முதல் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாமே!
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மறுதேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வகையில் நேற்றைய தினம் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

8.94 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 5.95 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவலையடையத் தேவையில்லை என அரசு தேர்வுகள் இயக்கககம் தெரிவித்துள்ளது. அவர்கள் மறுதேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக ஜூலை 2 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்.
அது போல் மறுகூட்டலுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். மறுதேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இன்று முதல் படித்தாலே 10ஆம் வகுப்புத் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications