பத்திரப்பதிவு.. சொத்து விற்பனை பத்திரப்பதிவு ஆவணங்கள் குறித்த உத்தரவு.. இனி ஒருத்தரும் தப்ப முடியாது
சென்னை: சென்னை: பத்திரப்பதிவு முறைகளில் பொதுமக்களின் வசதிக்காக, எத்தனையோ மாற்றங்களும், அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போதும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேவைக்கட்டணங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.. பத்திரபதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களாகவே மாற்றம் செய்யப்படாத நிலையில், ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்கு கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.

கட்டணம் உயர்வு: ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- என கட்டணமாக உயர்ந்துள்ளது.. குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதேபோல, தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/ லிருந்து ரூ.1,000/-வரையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10000/-, சொத்தின் சந்தை மதிப்பிற்கு 1 சதவீதமாக மாற்றியமைப்பது போன்றவையும் அடங்கும்.
மதிப்பு ஆவணங்கள்: பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்துவரும்நிலையில், மற்றொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது.. அதாவது, தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்புள்ள விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதற்காக பதிவாளர் அலுவலகத்திற்கு வரும்போது, விற்பவரிடமிருந்தும் வாங்குபவரிடமிருந்தும் பான்கார்டு பெறப்படுகிறது. இந்த எண் இல்லாதவர்கள் வருமானவரி சட்டத்தின்படி படிவம் 60ஐ பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.
முப்பது லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துகள் பரிவர்த்தனை செய்யப்படும்போது, விற்பவர், வாங்குபவர் பற்றிய விவரங்கள், அவர்களது ஆதார்எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் அந்தந்த சார் - பதிவாளர்களால் பதிவேற்றம் செய்யப்படும்.
சரிபார்ப்பு: அதன்படி, சொத்தை விற்பனை செய்பவர், அதனை வாங்குபவர்களின் ஆதார் நம்பர் பெறப்பட்டு, அவை அப்போதே UIDAI ஆதார் தரவுத்தளத்தில் சரிபார்க்கப்படுகின்றன. ஆதார் எண்ணுடன் PAN எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவுதொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு நிகழ் நேரத்திலேயே வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த நடைமுறையை சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், திருச்சி மாவட்டம் உறையூர் சார் - பதிவாளர் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அப்போதுதான், பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், 50 சதவீத தகவல்களே பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
வருமான வரித்துறை: அதாவது, உறையூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் உயர் மதிப்பில் பதிவான, 200 சொத்து பரிமாற்ற விபரங்கள், வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அனுப்பப்படவில்லையாம்.. தகவல் அறியும் உரிமை சட்டப்படி, ஒரு நபர் அளித்த மனுவுக்கு, அதிகாரிகள் அரைகுறையான தகவல்களையும் தந்துள்ளனர். வருமான வரித்துறைக்கும் இந்த மனு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட 2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி முக்கிய உத்தரவுகள் பிறக்கப்பட்டுள்ளன.. அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், 2021 - 22, 2022 - 23ம் நிதி ஆண்டுகளில், 30 லட்சம் ரூபாய்க்கு ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பில் பதிவான, சொத்து பரிமாற்ற பத்திர விபரங்களை உடனடியாக பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை பட்டியல் வடிவில், மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் வாயிலாக, ஐஜி அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வார்னிங்: ஒருவேளை இதில், அலட்சியம் காட்டும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது, தற்காலிக சஸ்பெண்ட் வரையிலான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டிஐஜிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், தகவல்கள் கூறுகின்றன.
உயர் மதிப்பு பத்திரப்பதிவு விபரங்களை மறைக்கும் சார் - பதிவாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளது, மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகின்றன.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications