Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதிவுக்கட்டணங்கள் ரத்து.. சட்டென "விலக்கு" தந்த தமிழக அரசு.. யாருக்கு பாருங்க.. அரசாணையே வந்துடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்த்தப்பட்டிருக்கும், பதிவுக்கட்டணத்தை, தமிழக அரசு பரிசீலித்து, கட்டணத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்டட சூழலில், ஒரு இன்ப அதிர்ச்சியை தமிழக அரசு தந்துள்ளது.

பத்திரப்பதிவு கட்டணத்தை தமிழக அரசு சமீபத்தில் டபுள் மடங்காக உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்துவரும்நிலையில், தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம், 9 சதவீதம் வசூல் செய்யப்படும் என்று இன்னொரு அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.

Registration fees cancel and Contractor Register Registration fee exemption by Tamil Nadu Government

அடுக்குமாடி குடியிருப்புகள்: அதாவது, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது.. அதுமட்டுமல்ல, வழிகாட்டி மதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம் பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியையே தருவதாக பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

பதிவுத்துறை: இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். எனவே, அதனால், பத்திரப்பதிவு துறை, இந்த கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாலாபுறமும் வெடித்து கிளம்பியபடியே உள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு தற்போது ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளது. அதன்படி, பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சலுகைகள்: பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு, தமிழக பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.. சலுகைகளை வழங்கி வருகிறது.. அவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையும், நலனும் காட்டி வருகிறது. அனைத்து துறைகளிலுமே இந்த நலன்கள், அவர்களுக்காகவே வழங்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில்தான், தமிழக அரசின் சார்பில் பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தனை நாளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேரும் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேருபவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

சபாஷ்: இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.. அதன்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் பட்டியல் இனத்தவர்களுக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே சலுகை, அனைத்து தரப்பினருக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+