குழந்தையின் கை அகற்றம்.. டாக்டர்கள் பொய் சொல்கிறார்கள்.. அரசு பதில் சொல்ல வேண்டும்.. தாய் கதறல்
சென்னை: எனது குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் அஜிஷா குற்றம் சாட்டியுள்ளார். தனியார் மருத்துவமனை வேண்டாம் என்றுதான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். அதிக வீரியமான மருத்துகளை கொடுத்து கையை அழுக வைத்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர்,வயது 32. இவருக்கு 1.5 கிலோ எடையில் பிறந்த குறைமாத ஆண் குழந்தையான முகமது மகிரினுக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு, ஹைட்ரோகெபாலஸ் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுவன் வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும்போது வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவந்தார்.

அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அன்று இரவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது குழந்தையான முகமது மகிரினுக்கு இரண்டு கையிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு ஐசியூவில் வைத்து கண்காணிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 29 ஆம் தேதி குழந்தைக்கு வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் கை நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அஜிஷா செவிலியர்களிடம் தெரிவித்துள்ளார். மருந்து செலுத்துவதால் ஏற்பட்ட நிறம் மாற்றம் ஒரு பிரச்சனையும் இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து சில மணி நேரத்திலேயே குழந்தையின் கை முழுவதுமாக நிறம் மாற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஜிஷா, நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்.
குழந்தை முகமது மகிரினை பரிசோதித்தவர்கள், குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று அந்த குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்திய நிலையில் அறுவை சிகிச்சை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை முழுவதுமாக அகற்றப்பட்டது.
செவிலியர்களின் கவனக்குறைவே குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக சுகாதாரத்துறை 3 துறை மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இந்த விசாரணை குழுவினர் இன்றுமுதல் விசாரணையை தொடங்குகின்றனர். தவறான சிகிச்சை தொடர்பாக, சம்பந்தபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விசாரணை குழு, தங்களது விசாரணையை 2 தினங்களில் முடித்து, விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினாலும் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன் என்றும் மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய குழந்தையின் தாய் அஜிஷா, தனது மகனின் கை பறிபோனதற்குக் காரணம் மருத்துவமனையின் அலட்சியம்தான் என்று கூறினார். நான் இரண்டு குழந்தைக்கு தாய், யாரோ சொல்வதை கேட்டு நான் ஏன் பேச வேண்டும். எனது மகனின் கை பறிபோனதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் அஜிஷா தெரிவித்தார். தனியார் மருத்துவமனை வேண்டாம் என்றுதான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். அதிக வீரியமான மருத்துகளை கொடுத்து கையை அழுக வைத்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அஜிஷா.
-
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications