Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.5 லட்சம் இலவச சிகிச்சைக்கு தரும் மத்திய அரசு.. ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தில் புது அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகிலேயே மிகப்பெரிய, அரசினால் முழுமையான மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தான் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டமாகும்.. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டு உள்ள பயனாளிகள் அரசின் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்கள் என்னென்ன தெரியுமா?

நாட்டிலுள்ள குடிமக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவே 2018ல் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா திட்டமாகும். வருடத்துக்கு ஒரு குடும்பத்துக்கு, ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது..

Ayushman Bharat Vaya Vandana card rs 5 lakh central governmnet

ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா என்கிற மருத்துவ காப்பீடு திட்டத்தின்மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.. இதற்கு எந்தவிதமான பாலின பேதம், வேறுபாடுகள் கிடையாது. ஆனால், IN PATIENTS அதாவது, மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மட்டுமே இந்த திட்டத்தினால் பலனடைய முடியும்.

புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு உள்ளிட்ட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்

யாருக்கெல்லாம் கிடைக்காது

ஆனால், டூ வீலர்கள், 3 சக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், மாத வருமானம் ரூ.10,000க்கு மேல் உள்ளவர்கள், விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள், சொந்த வீடு, கிசான் அட்டை வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகள், வீடுகளில் ஏசி, லேண்ட்லைன் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது.

இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது..

முதியோருக்கான வய வந்தனா

அதில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்றும் தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த வருடம், ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் நோக்கத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியிருந்தது.. அவர்களின் சமூக பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கிய நிலையில், ஆயுஷ்மான் வய வந்தனா திட்டத்தில், 1.06 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ சேவை தொடர்பான விண்ணப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை

மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இணையமைச்சர், "மத்திய அரசு 2024ஆம் ஆண்டின் அக்டோபர் 29ம் தேதியன்று, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களையும் உள்ளடக்கியது.

இந்த முயற்சியின் கீழ் பயனாளிகள் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகள் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை சலுகைகளைப் பெறலாம்.

31,466 பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள்

இதுமட்டுமல்லாமல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இடம் பெயர்தல் திறன் அம்சம், தகுதியான பயனாளிகள் வய வந்தனா திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 31,466 பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், சுகாதார சேவைகளை அணுக அனுமதிக்கிறது.

இது நாடு முழுவதும் உள்ள முதியோர்களுக்கு தரமான சுகாதாரப் பராமரிப்பை தடையற்ற முறையிலும் மற்றும் சமமான வகையிலும் அணுகலை உறுதி செய்கிறது. வய வந்தனா அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட 14,194 தனியார் சுகாதார சேவை வழங்கும் மையங்களின் பரந்த வலையமைப்பு மூலம் சிகிச்சையைப் பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+