‛‛பயண நேரம் மாற்றம்’’.. பெங்களூர் - சென்னை டபுள் டெக்கர் ரயில் பயணிகளே கவனம்.. மே 1 முதல் அமல்
சென்னை: தினமும் இயங்கி வரும் பெங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையேயான டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேர மாற்றம் மே மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்த சென்னைக்கும் தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இவர்கள் பஸ், கார்களில் பயணம் செய்தால் அதிக செலவு ஏற்படும். இதனால் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை - பெங்களூர் இடையேயான மக்களின் தேவையை கருதி பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வந்தேபாரத் ரயிலும் சென்னை-மைசூருக்கு பெங்களூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை-பெங்களூரை பொறுத்தமட்டில் முக்கியமான ரயில்களில் ஒன்று டபுள் டெக்கர். இந்த ரயில் பெங்களூர் கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இடையேயான டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22626) ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி தினமும் இயங்கும் பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இடையேயான டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் (22626) மே மாதம் 1ம் தேதி முதல் புதிய நேரத்தில் இயங்க உள்ளது. அதாவது தினமும் மதியம் 1.30 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளார். அதன்பிறகு 1.40 மணிக்கு கண்டோன்மென்ட்டை அடைந்து 1.42 மணிக்கு புறப்படும்.
பிறகு கிருஷ்ணராஜபுரத்துக்கு (கேஆர்புரம்) 1.52 மணிக்கு சென்று 1.54 மணிக்கு அங்கிருந்து புறப்படும். பங்காபேட்டையை 2.34 மணிக்கு அடையும் ரயில் 2.35 மணிக்கு அங்கிருந்து பறப்படும். குப்பத்துக்கு 3.02 மணிக்கு சென்று 3.03 மணிக்கு அங்கிருந்து புறப்படும். அதன்பிறகு 4.15 மணிக்கு ஜோலார்பேட்டை வரும் ரயில் 4.20 மணிக்கு புறப்படும்.
இதையடுத்து மாலை 4.34 மணிக்கு வாணியம்பாடி வரும் ரயில் அங்கிருந்து 4.36 மணிக்கு கிளம்பும். பின்னர் மாலை 4.48 மணிக்கு ஆம்பூர் செல்லும் ரயில் 4.50 மணிக்கு புறப்பட்டு 5.43 மணிக்கு காட்பாடியை அடைந்து அங்கிருந்து 5.45 மணிக்கு புறப்படும். இதையடுத்து அரக்கோணத்துக்கு 6.28 மணிக்கும், பெரம்பூருக்கு 7.13 மணிக்கும் செல்லும் ரயில் கடைசியாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இரவு 7.45 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!












Click it and Unblock the Notifications