நியாயத்துக்கே பல்லக்கு தூக்கனும்.. அண்ணா காலத்துலயே திமுக அப்டி! அண்ணாமலைக்கு சேகர் பாபு சூசக பதில்
சென்னை: நியாயத்துக்கு மட்டுமே பல்லக்கு தூக்க வேண்டுமென்றும், வேறு யாருக்கு பல்லக்கு தூக்கக்கூடாது எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் தருமபுரம் ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்.

ஜீயருக்கு பல்லக்கு
பதவியேற்ற நாளிலேயே தருமபுரத்தில் ஆதீனத்தை அடித்தட்டு மக்கள் பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகம், "தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்." என்று கண்டனம் தெரிவித்து இருந்தது.

பட்டினப் பிரவேசம்
இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தருமபுர ஆதீனம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு இந்து அமைப்பினரும், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை ஆகிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மன்னார்குடி ஜீயர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர், "பட்டினப் பிரவேசம் என்பது சம்பிரதாயமான நிகழ்வு. இதை எந்த ஒரு இயக்கத்தாலும் தடுக்க முடியாது. நிச்சயம் பட்டினப் பிரவேசம் நடக்கும். யாராலும் அதை நிறுத்திவிட இயலாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில்களில் தலையிடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த அமைச்சராலும் சாலையில் நடக்க முடியாது." என எச்சரித்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், "தமிழ்நாடு அரசு பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்துள்ளது மன வேதனை தருகிறது. ஆதீனங்கள், மடாதிபதிகள், கோயில்கள் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது. இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து பேச இருக்கிறேன். தமிழ்நாடு அரசு அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், ஆன்மீகத்தில் தலையிடுவதால் கெட்டப்பெயர் ஏற்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள், எம்.எல்.ஏக்கள்
வெற்றிபெற்றவுடன் கிரிக்கெட் வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை தோளில் தூக்கி சுமந்து செல்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால், மத விசயத்தில் மட்டும் இதை ஏன் செய்ய வேண்டும். இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. திமுகவில் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால் கெட்டப்பெயர் ஏற்படுகிறது". என்றார்.

அமைச்சர் சேகர்பாபு கருத்து
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு "தருமபுர ஆதினம் பட்டினப் பிரவேசம் பல்லக்கு தூக்கு நிகழ்வு தொடர்பாக அனைவரது மனமும் குளிரும் வகையில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்." எனக்கூறினார். நானே பல்லாக்கு தூக்குவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, "யாருக்கும் பல்லாக்கு தூக்க கூடாது எனவும், நியாயத்திற்கு மட்டுமே பல்லக்கு தூக்க வேண்டும்" என அமைச்சர் பதிலளித்தார்.

அண்ணா காலத்துலயே திமுக அப்படிதான்
ஜீயர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எந்த பிரச்னைகளும் வராத வகையில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. வாழ்த்து சொல்வது அவரவர் விருப்பம்." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications