ரிதன்யாவின் கடைசி சிரிப்பு! 200 பவுன்னாவது ஒன்னாவது இந்த புன்னகையை பாருங்க! புண்ணியம் செய்யாத கவின்
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையாலும், கணவரின் உடல் ரீதியிலான துன்புறுத்தலாலும் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா, திருமணத்திற்கு முதல் நாள், தனது தாய் வீட்டு சீதனமான காரில் அழகாக சிரித்துக் கொண்டு செல்லும் காட்சி காண்போர் மனதை கலங்கச் செய்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த பனியன் மில் உரிமையாளர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (28) கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது வரதட்சணையாக 300 பவுன் நகை, ரூ.70 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை கொடுக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல், திருமணத்தை ரூ.2.5 கோடி செலவில் அண்ணாதுரை ஆடம்பரமாக நடத்தினார். இந்தத் திருமணத்தைப் பார்த்து ஊரே மெச்சியது.
இந்த நிலையில், திருமணமான 78 நாட்களிலேயே கணவர் வீட்டார் வரதட்சணைக் கொடுமை செய்வதாகவும், கவின்குமார் பாலியல் ரீதியாக தன்னைத் துன்புறுத்துவதாகவும் ஆடியோ மெசேஜாகத் தனது தந்தைக்கு அனுப்பிவிட்டுப் பூச்சி மருந்து குடித்துவிட்டு உயிரிழந்தார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தற்போது கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரிதன்யாவுக்கு அவருடைய குடும்பத்தினர் செய்த சீதனங்கள் மற்றும் திருமண நிகழ்வுகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரிதன்யா மனம் முழுக்க கனவுகளுடன் திருமணத்திற்குத் தயாராகி, எல்லாரையும் பார்த்துச் சிரித்தபடியே இருக்கிறார். அவருடைய முகத்தில் அத்தனை மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
திருமணத்திற்கு முதல் நாள், மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்னதாக, பெண்ணுக்கு அவருடைய உறவினர்கள் செய்யும் சடங்குகள் நடந்தன. அந்தச் சடங்கில் தாய்மாமன், அத்தை உறவுமுறையினர் ரிதன்யாவுக்கு நகைகளை அணிவிக்கிறார்கள். அவர்களில், தாய்மாமனோ யார் எனத் தெரியவில்லை, ரிதன்யா அவரிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறார்.
வெட்கமும் சிரிப்பும் கலந்த புன்னகை அந்தப் பெண் முகத்தில் காணப்படுகிறது. இதைப் பார்த்த அவருடைய பெற்றோரின் கண்கள் எத்தனை ஆனந்தக் கண்ணீரால் நிறைந்திருக்கும்! அதிலும், தனது மகள் உயர்ரக காரில் மாப்பிள்ளையுடன் தன் வீட்டிற்கு வர வேண்டும், தனது மகள், பேரக் குழந்தைகளுடன் இந்த உலகத்தையே சுற்றி வர வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு அண்ணாதுரை உயர்ரக காரை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்தக் காரில்தான் ரிதன்யா பின்சீட்டில் அமர்ந்து மண்டபத்திற்குச் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ரிதன்யா அழகாகச் சிரித்துக் கொண்டே 'டாட்டா' காட்டுகிறார். திருமணம் முடிந்ததும் இந்த ஆல்பங்களையும் வீடியோக்களையும் வயதான பின்பும் அசைபோட வேண்டிய நிலையில், ரிதன்யாவின் வாழ்வு ஆரம்பிக்காமலேயே முடிந்துவிட்டது. இதுதான் கடைசிச் சிரிப்பு எனத் தெரியாமல் சிரித்தாரோ? ரிதன்யா, உன்னைத் தங்கத் தட்டில் தாங்க உன் குடும்பமே இருக்கும்போது அவசரப்பட்டுவிட்டாயேம்மா!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications