சென்னையில் ஒருவழிப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளே உஷார்.. போலீஸ் போட்ட அதிரடி திட்டம்
சென்னை: ஒருவழிப்பாதையில் புகுந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க சென்னை மாநகர டிராபிக் போலீஸ் அதிரடியாக ரோடு ராஜா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாட்டில் எங்குமே இல்லாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இத்தனைக்கும் சென்னைக்குள் எந்த வெளியூர் பேருந்துகளும் வருவது இல்லை.. ஏன் கனரக வாகனங்கள் கூட முக்கிய நேரங்களில் ஊருக்குள் வரவே முடியாது.. சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் டவுன் பஸ்களை போல் புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன.

அப்படி இருந்தும் சென்னைக்குள் தாங்க முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் இங்கு தான் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் என்று எந்த பகுதியையும் சொல்ல முடியாது.. அந்த அளவிற்கு வாகன நெருக்கம் மிக அதிகம் ஆகும்.
சென்னையின் மெயின் சாலைகளான ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, வடபழனி சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, வேளச்சேரி - தாம்பரம் சாலை, ஆந்திராவின் தடா செல்லும் சாலை, திருவள்ளூர் செல்லும் சாலை, திருவெற்றியூர் சாலை, எண்ணூர் சாலை, நியூ ஆவடி ரோடு, பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை, திருப்பதி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என எந்த சாலையிலும் வாகனங்கள் எண்ணிக்கை மிக குறைவாக இல்லை.. வாகன நெருக்கம் மிக அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.. இதில் பலரும் கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் நாள்தோறும் பயணிக்கிறார்கள்.
சென்னையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் சில நிமிடங்கள் வாகனங்கள் நெரிசலில் நின்றாலே நீண்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக பல்வேறு சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மெயின் சாலைகள் என்று இல்லாமல், நகரத்திற்குள் சிறிய தெருக்களில் செல்லும் பல்வேறு சாலைகள் கூட ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
சில வாகன ஓட்டிகள் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் பயணிப்பதை தினசரி வாடிக்கையாக வைத்துள்ளனர்.. எல்லா நேரமும் போலீசாரால் கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் ஒருவழிப்பாதையில் புகுந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடிக்க சென்னை மாநகர டிராபிக் போலீஸ் அதிரடியாக ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
நடிகர் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்துனு மற்றும் நடிகர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.. போலீசாரின் இந்த திட்டப்படி, ஒருவழிப்பாதையில் பயணிப்போரை செல்பி அல்லது புகைப்படம் எடுத்து ரோடு ராஜா என்ற ஹாஷ்டாக்கில் போட்டால் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications