கசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி
கணவனை மனைவியே கொன்றதுடன் தடயங்களையும் அழித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: தாம்பத்ய சுகம் இல்லையாம்.. புருஷனை தலைகாணியை அமுக்கி கொன்றதுடன், அப்படி ஒரு கொலையை மறைக்க வெறும் 90 நிமிஷங்களில் எல்லா தடயங்களையும் அழித்துள்ளார் ஒரு சாமர்த்தியக்கார மனைவி!
உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் என்.டி திவாரி. இவரது மகன் ரோஹித் திவாரி. திருமணமாகி மனைவியுடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 11-ம் தேதி உத்தரகாண்ட்டில் தேர்தல் என்பதால் அங்கே சென்று ஓட்டு போட்டுவிட்டு, வீட்டுக்கு 15-ம் தேதி வந்திருக்கிறார். வரும்போதே ஃபுல் போதை!

மூக்கில் ரத்தம்
பொழுது விடிந்தவுடன், அதாவது 16ம் தேதி ரோஹித் மயங்கி விட்டதாகவும், ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மூக்கில் ரத்தம் வடிந்தபடி இருக்கிறது என்றும் போன் வந்துள்ளது.

மாரடைப்பு
இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ரோஹித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இருந்தாலும் மாரடைப்பு வந்து ரோஹித் இறந்தார் என்று சொல்லவும் சந்தேகம் ஆரம்பமானது. அதனால் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய கொண்டு போகப்பட்டது.

விசாரணை
அப்போதுதான் பல திடுக் தகவல்கள் வெளியானது. ரோஹித் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதாகவும், மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து போலீசார் விறுவிறு விசாரணையில் இறங்கினர். முதல் வேலையாக ரோஹித் வீட்டுக்கு போனார்கள். அங்கிருந்த 7 சிசிடிவி கேமராக்களை கைப்பற்றினர். அடுத்ததாக, மனைவி அபூர்வா, வீட்டு வேலைக்காரி, சொந்தக்கார பெண் என தனித்தனி விசாரணை நடத்தப்பட்டது .

வேலைக்காரி
இதில் வேலைக்காரிதான் சில விஷயங்களை போலீசாரிடம் சொல்லி இருக்கிறார். "ரோஹித் - அபூர்வா இருவரும் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள், ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி வாழ்க்கைதான், ரோஹித் இறந்த அன்றைக்கு கூட வீடியோ காலில் ரெண்டுபேரும் சண்டை போட்டுக் கொண்டார்கள்" என்று சொல்லி உள்ளார்.

10 மணி நேரம்
இதன்பிறகு போலீசார் விசாரணை அபூர்வாவிடம் ஆரம்பமானது. எப்படியோ 10 மணி நேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை நடந்தது. ஆரம்பத்தில் இதில் சம்பந்தமே இல்லை என்று அபூர்வா சொன்னாலும், போலீசாரிடம் தப்ப முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தை கக்க தொடங்கினார்.

தலைகாணி
விஷயம் இதுதான்.. ரோஹித்துடன் நடந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லையாம்.. தாம்பத்ய சந்தோஷமும் இல்லையாம்.. அதனால் ஏப்ரல் 16-ம் தேதி ரோஹித் ரூமில் தூங்கி கொண்டிருந்தபோது, தலைகாணி எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி கொன்றதாக அபூர்வா வாக்குமூலம் தந்தார்!

முன்னாள் காதலன்
அதன்பிறகு புருஷன் இறந்துவிட்டார் என்று உறுதியாக தெரிந்த பிறகுதான் அங்கிருந்த தடயங்களை 90 நிமிடங்களில் அழித்துள்ளார். இந்த கொலையில் இன்னொரு முக்கிய சமாச்சாரம் என்னவென்றால், அபூர்வாவுக்கு ஒரு லவ் இருந்திருக்கிறது... அதாவது முன்னாள் காதலன்... ரோஹித் கொலையில் அந்த லவ்வருக்கும் தொடர்பு உள்ளதால், போலீசார் அவரையும் விசாரணை வளையத்துக்குள் ரவுண்டு கட்டி கொண்டு வந்துவிட்டனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications