சென்னை கோயம்பேட்டுக்கு வந்த தாஜ்மகால் ரோஜாக்கள்! வாங்க அலைமோதிய காதலர்கள்!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்கள படுஜோராக விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தம் 450 டன் ரோஜாக்கள் வந்துள்ளனவாம். இவை வேகமாக விற்றுத் தீர்வதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
காதலர் தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கித் தருவார்கள்.

அதில் முக்கியமானது ரோஜா பூக்கள் ஆகும். இந்த பூக்களை காதலிக்கு காதலர்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அத்துடன் அவரவர் வசதிக்கேற்ப பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
காதலர் தினத்தையொட்டி நேற்று இரவு முதலே ரோஜா பூக்கள் கோயம்பேடு சந்தைக்கு வரத் தொடங்கின. அதாவது அந்த காலங்களில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பிங்க், உள்ளிட்ட நிறங்களில் ரோஜாக்கள் இருக்கும்.
ஆனால் இந்த முறை டிரென்டிங்கில் நிறைய நிறங்களில் ரோஜாக்கள் வந்துள்ளன. அதாவது தாஜ்மகால் ரோஜாக்கள் வந்துள்ளன. அவை 20 பூக்கள் கொண்ட பொக்கே 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அது போல் பிங்க் நிற பூக்கள் கொண்ட பூங்கொத்து 20 எண்ணிக்கை ரூ 400 க்கும் சிவப்பு நிற ரோஜாக்கள் ரூ 350 -க்கும், மஞ்சள் நிறம் ரூ 300-க்கும் விற்பனையாகிறது. அதிகாலை முதலே கோயம்பேடு சந்தைக்கு வரும் காதலர்கள் பூக்களை வாங்கிச் செல்கிறார்கள்.
அது போல் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதற்காக ரோஜா பூ மாலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் சாக்லேட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் இதய வடிவிலான சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றையும் முன்கூட்டியே ஆர்டர் செய்து காதலர்கள் வாங்கிச் செல்கிறார்கள். இன்று தியேட்டர்கள், பூங்காக்கள், மால்களில் கூட்டம் அலைமோதும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications