சென்னையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள்.. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள்.. ஓபிஎஸ்
சென்னை: எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். காவல் துறையிடம் உள்ள அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், ரவுடிகளை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "ஆளுநர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில்மீது குண்டு வீச்சு, சென்னையில் உணவக மேலாளர் ரவுடிகளால் அடித்துக் கொலை என்ற வரிசையில் சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர். நகரில், குடியிருப்புகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சூறையாடப்பட்ட வாகனங்களை சரி செய்யவே இலட்சக்கணக்கான ரூபாய் ஆகும் என்று பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க. அரசால் திணிக்கப்படும் தொடர் நிதிச் சுமை ஒருபுறம் என்றால், மறுபுறம் சட்டம் ஒழுங்கின்மை காரணமாக கூடுதல் நிதிச் செலவு ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படுகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். காவல் துறையிடம் உள்ள அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், ரவுடிகளை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications