பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு புதிய பதவி.. அதுவும் மாவட்ட அளவில்..! பரபரப்பு
சென்னை: கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்துள்ள மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என்.குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது. குறிப்பாக 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கிறது.
படப்பை குணா: இந்த விவகாரம் தொடர்பாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இவர் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் நிலுவையிலேயே இருக்கிறது. போலீசார் படப்பை குணாவை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்தாண்டு அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இருப்பினும், குணா கடந்தாண்டு நவம்பரில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதற்கிடையே படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே கட்சி பணிகளில் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் தீவிரமாகச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் படப்பை குணா செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
புதிய பதவி: இந்தச் சூழலில் தான் படப்பை குணா பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், அவர் பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகள், போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டே வந்தார். இந்தச் சூழலில், பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜகவில் இணைந்த அவருக்குக் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், " மாநில தலைவர் கே அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனை படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நியமனம்: அதன்படி பாஜகவின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவராகப் படப்பை குணா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 50+ வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியலின அணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications