சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு போன் வந்தது. போனை எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவன் காவல் நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது என்றும், அது இன்னும் 1 மணி நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதையடுத்து தான் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. மர்ம போனால் காவல் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications