ரூ.11.30 கோடியை காணோம்.. டீக்கு ரூ.30 லட்சம்.. ஆளுநர் ரவி மீது பிடிஆர் பரபர புகார்.. இனி புது ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகை இனி இப்படித்தான் செலவு செய்ய வேண்டும், அதற்கு ஏற்றபடியே நிதிகளை ரிலீஸ் செய்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விதிமீறல் செலவுகளை பட்டியலிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

Rs. 11.30 Crore is missing: Minister PTR Palanivel Thiagarajan blasting accusation against Governor R N Ravi

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.

இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அவையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவையில் நான் சொன்ன தகவலை வாபஸ் வாங்குகிறேன். அட்சய பாத்திராவிற்கு தருகிறேன் என்று கூறி 2 கோடி.. 2 கோடி ஆளுநர் மூலம் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினேன். அதை ஆராய்ந்து பார்த்தோம். அதில் என்ன கண்டுபிடித்தோம் என்றால்.. அட்சய பாத்திரா என்ற காரணத்தை சொல்லி.. கவர்னரின் வங்கி கணக்கிற்கு பணம் மாற்றி உள்ளனர். அதில் இருந்து சில தொகையை அட்சய பாத்திராவிற்கு மாற்றி உள்ளனர். சிலவற்றை வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளனர். இந்த உண்மையான கணக்கை இப்போதுதான் காட்டி உள்ளனர்.

நான் இரண்டு கருத்துக்களை சொல்கிறேன். மொத்த செல்வாக 18. 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 11.30 கோடி ரூபாய் ஆளுநரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த 11.30 கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. அரசுக்கு தெரியாமல் இவ்வளவு பணத்தை செலவு செய்துள்ளனர். இது விதி மீறல். முழுக்க முழுக்க விதி மீறல். அவர்களின் சொந்த கணக்கிற்கு மாற்றி செலவு செய்துள்ளனர்.

இரண்டாவது.. "பெட்டி" செலவு.. அதாவது சின்ன செலவு என்று கூறி இதை செலவு செய்துள்ளனர். பெட்டி செலவிற்கு 11.30 கோடி ரூபாயா? இந்த நிதி எல்லாம் எதோ ஒரு நிறுவனத்திற்கு, சாரிட்டி நிறுவனத்திற்கு வழங்குகின்றனர். மற்ற மாநிலங்களில்.. பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மாநிலங்களில் ஆளுநருக்கு குறைவாகவே நிதி வழங்குகின்றனர்.

உதாரணமாக பாஜக ஆளும் கர்நாடகாவில் 25 லட்சம்.. கேரளா, மேற்கு வங்கத்தில் 25 லட்சம்.. உத்தர பிரதேசத்தில் 50 லட்சத்தை ஒரு கோடியாக மாற்றி உள்ளனர். நான் ஒரு வருந்தத்தக்க தகவலை தெரிவிக்கிறேன். செப்டம்பர் 21க்கு பின் நமக்கு வந்த பில்லில் இருக்கும் விவரங்கள்

தேநீர் விருந்து - ரூ. 30 லட்சம் ரூபாய்.

குடிமைப்பணி மாணவர்கள் மீட்டிங் - 5 லட்சம் ரூபாய்.

ஊட்டி கலாச்சார நிகழ்வு - 3 லட்ச ரூபாய்.

இதெல்லாம் இந்த பில்லில் வந்து இருக்கவே கூடாது. ஆனால் வந்து இருக்கிறது. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க கூடாது என்று விதியில் இருந்தும், மாதம் மாதம் இவர் ஒரு சிலருக்கு மாத மாதம் கொடுத்துள்ளார். அணைத்து பணியாளர்களுக்கும் விதியை மீறி போனஸ் கொடுத்துள்ளனர். இதில் விதிகளை மீறி கையெழுத்து போட்டுள்ளனர்.

எல்லா விதிகளையும் மீறி நிதியை பெற்றுள்ளனர். நான் இங்கே உறுதி கொடுக்கிறேன். இந்த மாதிரியான விதிமுறை மீறல்கள் தடுக்கப்பட்டு.. இனி விதிப்படி மட்டுமே அவர்கள் செலவு செய்ய முடியும் .. அதற்கு ஏற்றபடியே நிதியை ரிலீஸ் செய்வோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+