தமிழகத்தில் மெகா மாத தவணை முறைகேடு.. 1100 கோடி மோசடி.. 4 பேரை கைது செய்து அமலாக்கத்துறை அதிரடி!
சென்னை: 1100 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் தமிழக நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
'டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா' (டால் -DAL ) என்ற நிறுவனம், நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேரிடம் இருந்து மாதத் தவணையில் பணம் வசூல் செய்துள்ளது.
முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி 1100 கோடி ரூபாயை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டிஸ்க் அஸட்ஸ்
டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா என்ற நிறுவனம் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2006ல் தொடங்கப்பட்டது. மாதா மாதம் பணம் கட்டினால் குறிப்பிட்ட வட்டியுடன் பணம் அல்லது நிலம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் 3000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இவர்களின் பணம் கட்டி வந்தனர்.

1100 கோடி
ஆனால் இந்த நிறுவனம் சொன்னபடி கட்டிய பணத்தையும் கொடுக்கவில்லை, நிலத்தையும் கொடுக்கவில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'செபி' அமைப்பிடமும் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. நிலம் வாங்கித் தருவதாக 12 லட்சம் பேரிடம் இதுவரை ரூ.1,100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.207 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

செபி
இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமும் (செபி), இந்நிறுவனம் இனிமேல் யாரிடம் இருந்தும் முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. மேலும், இந்தமோசடி தொடர்பாக வந்தபுகார்களின்பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு
இந்நிலையில், இந்நிறுவனம் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் செய்திருப்பதாகக் கூறி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அதன் நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணக்குமார் ஆகிய 4 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில், உமாசங்கர் உட்பட 4 பேரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது
இதையடுத்து இந்த நிறுவனம் மீது தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டு வந்தநிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தனர். பிப்ரவரி 25, 2022 அன்று இவர்களின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த நால்வரையும் கைது செய்துள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications