"மதுரைக்காரங்க"ன்னாலே இப்படித்தான் போல... செஞ்ச சீரைப் பாருங்க.. எப்பே.. 2 கோடிப்பே.. 2 கோடியாம்!!
மகளுக்கு 2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை தந்துள்ளார் அதிமுக மாஜி எம்எல்ஏ
சென்னை: ஒரு மாஜி எம்எல்ஏவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று மூக்கின் மேல்விரலை வைக்கும் ஒரு காரியத்தை செய்திருக்கிறார்! மதுரை மாவட்டம் முழுக்க இந்த பேச்சுதான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது!
Recommended Video
வழக்கமாக சீர்வரிசை என்பது நமது கலாச்சாரத்தில் ஊறிபோன ஒன்று.. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும், தாங்கள் வளர்த்த பெண்ணுக்கு கல்யாணத்தின்போது வாழ்க்கைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி தந்து, சீர்வரிசையாக அனுப்பி வைப்பது நம் பழக்கம்.
இந்த சீர்வரிசையை சேர்ப்பதற்காக எத்தனையோ ஏழை பெற்றோர் தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நேரத்தையும் தொலைத்துள்ளனர்.. இப்போதும் தொலைத்தும் வருகின்றனர்.. தங்கள் மகள் போகிற வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஒரே விஷயம்தான் இந்த சீர்வரிசை.

புதுக்கோட்டை
அந்த வகையில் 4ம் தேதி நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஒரு கல்யாணம் நடந்தது.. அந்த வீட்டில் பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசையை பார்த்து, அந்த ஊரே அசந்து போய்விட்டது.. எவ்வளவு செலவு? எவ்வளவு நகை? எவ்வளவு பொருட்கள் என்று ஒவ்வொன்றையும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர்.

வீடியோ
கடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் இந்த சீர்வரிசை சம்பந்தமான வீடியோவும், போட்டோக்களும்தான் வைரலாகி வருகின்றன.. ஏகப்பட்ட பாத்திரங்கள் கண்ணை பளிச்சிடுகின்றன.. காரணம் அவ்வளவும் தங்கம் முதல் சில்வர் வரை ஜொலி ஜொலித்தது.. ஆடுகள் முதல் கார்கள் வரை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது.

தமிழரசு
மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான தமிழரசுவின் மகள் கல்யாணம்தான் இது.. மாஜி எம்எல்ஏ தமிழரசு, தன்னுடைய மகள் கீர்த்திக்குதான் இவ்வளவு சீர்வரிசையை கொட்டி கொடுத்துள்ளார்.. கொடிமங்கலம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர்தான் மாப்பிள்ளை.. அந்த கல்யாண மண்டபமே வெறும் சீர்வரிசைகள்தான் நிறைந்து வழிந்தது.

வீடியோ வைரல்
மணமக்களை வாழ்த்த வந்தவர்கள், அந்த பொருட்களை தான் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு நின்றனர். மொத்தம் அந்த சீர்வரிசை 2 கோடி ரூபாய் இருக்குமாம்.. கல்யாணம் நடந்து 3 நாள் ஆகியும், அந்த சீர்வரிசை பொருட்களின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications