சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன்...குடிமகன்கள் மூர்க்கத்தனமாக முற்றுகை...2-வது நாளாக டாஸ்மாக் மதுகடைகள் விற்பனை ரூ.428 கோடி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் 2 வார லாக்டவுன் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரூ.428 கோடியாக இருந்தது.

Recommended Video

    டாஸ்மாக்கில் சூப்பர் சேல்ஸ்… ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு விற்பனை!

    அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று... 2 அமைச்சர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை..! அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று... 2 அமைச்சர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை..!

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் டாஸ்மாக் மதுபான கடைகல் மூடப்படாமல் இருந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

    டாஸ்மாக் கடைகள்

    டாஸ்மாக் கடைகள்

    கொரோனா பரவலுக்கு காரணமாக இருப்பதே டாஸ்மாக் மதுபான கடைகள்தான்; கூட்டம் கூட்டமாக குவியும் குடிமகன்கள், எந்த ஒரு கட்டுப்பாட்டையும் பின்பற்றுவதும் இல்லை. இதனால்தான் கொரோனா மிக கோரத்தாண்டவமாடுகிறது என்பது அனைவரது புகார்.

    கடைகள் திறப்பு

    கடைகள் திறப்பு

    இது தொடர்பான வழக்கில், டாஸ்மாக் மதுபான கடைகளின் நேரத்தை குறைப்போம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதன் பின்னர் 2 வார லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் லாக்டவுன் ரத்து செய்யப்பட்டு மதுபான கடைகள் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருந்தன.

    ரூ426 கோடி விற்பனை

    ரூ426 கோடி விற்பனை

    2 வார லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்பதால் சனிக்கிழமையன்று மட்டுமே ரூ426 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ100 கோடிக்கு மனுபானங்கள் விற்பனையாகின. இதேபோல் திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களிலும் மதுபானங்கள் விற்பனை களை கட்டி இருந்தது.

    ரூ428 கோடி விற்பனை

    ரூ428 கோடி விற்பனை

    இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமையும் டாஸ்மாக் மதுபான கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. 2-வது நாளாக நேற்று மட்டும் ரூ428 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. சென்னை மண்டலத்தில் ரூ98 கோடி; திருச்சி மண்டலத்தில் ரூ87 கோடி மதுபானங்கள் விற்பனையாகின. மதுரை மண்டலத்தில் ரூ97 கோடிக்கும் மதுரை மண்டலத்தில் ரூ67 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றனவாம். 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    பதுக்கல் மதுபானங்கள்

    பதுக்கல் மதுபானங்கள்

    லாக்டவுனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் வாங்கி பதுக்கப்படுகின்றன. இப்படி கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனையை தடுப்பதில் போலீசார் தீவிரம் காட்டியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rs 428 Crore sales at Tasmac outlets before TN Full Lockdown on Sunday,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X