குடும்ப அட்டைதாரர்களுக்கு நிம்மதி.. நிவாரணம் ரூ.6000 "இவங்களுக்கு" உண்டா? இன்றே டிரெயினிங் ஆரம்பம்
சென்னை: 6000 ரூபாய் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட உள்ளநிலையில், அதில், ஏதேனும் குளறுபடிகள் செய்து மக்களுக்கு சென்றடைவதில் பிரச்சனை ஏற்படலாம் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இதையடுத்து, இதற்கும் ஒரு முக்கிய அதிரடியை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள, 6,000 ரூபாய் நிவாரண தொகை, மக்களிடம் பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது... சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும் என்று அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.

நிவாரணம் அறிவிப்பு: புயல், மழை வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால், அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் (12) நோட்டுகளாக வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
இதைத்தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய, மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தாலுகா வாரியாக நிவாரணம் வழங்கப்படும். வரும், 16ம் தேதி முதல், நிவாரண நிதிக்கான டோக்கன்கள் வழங்கப்படுவதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில், வீட்டுக்கடன் செலுத்துவோரின் சிரமம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்ல, வங்கியின் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டால் மினிமம் பேலன்ஸ் என்று கூறி பணம் பிடிக்கப்பட்டுவிடும். மொத்த நிவாரணத்தொகையும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குளறுபடிகள்: இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டால் ஏதேனும் குளறுபடிகள் செய்து மக்களுக்கு சென்றடைவதில் பிரச்சனை இருக்கும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அதனால்தான், எந்தவித குளறுபடிகளும் இல்லாமல், பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை சென்றடைய வேண்டும் என்றும், ரேஷன் கடைகள் வாயிலாக நிவாரணத்தொகையை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சிகள் தரப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்துகூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது..
டோக்கன்கள்: இந்த கூட்டத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நிவாரணத்தை முறையாக கொண்டு சேர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுக்கு இன்றுமுதல் பயிற்சி வழங்குவது குறித்து விரிவானஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கார்டுதாரர்களின் வீடுகளில், டோக்கன் வழங்குவது, நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சியும் ஆரம்பமாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications