திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை! இனிதான் கச்சேரி இருக்கு -ஆர்.எஸ்.பாரதி
சென்னை: திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து இதுவரை யாரும் தப்பியதாக வரலாறு இல்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மேலும், திமுக தொடரும் வழக்குகள் அனைத்தும் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என அவர் கூறினார்.
விரைவில் உள்ளே போக வேண்டியவர்கள் போவார்கள், அனுபவிக்க வேண்டியதை அனுபவிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை மனதில் வைத்து பேசினார்.

ஆர்.எஸ்.பாரதி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வழக்குத் தொடர்ந்த திமுக சட்டத்துறை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் உற்சாகமாக பேசிய அவர், திமுக தொடரும் வழக்குகள் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என்றும் திமுக தொடர்ந்த வழக்கிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
திமுக தொடர்ந்த வழக்குகளால் பலர் தண்டனை பெற்றிருக்கிறார்கள் சிலர் தண்டனைக் காலத்தையே அனுபவித்து முடித்திருக்கிறார்கள் இதனால் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கிலும் திமுக தான் வெற்றிபெறும் என நம்பிக்கை பொங்க கூறினார். மேலும், விரைவில் உள்ளே போக வேண்டியவர்கள் போவார்கள், அனுபவிக்க வேண்டியதை அனுபவிப்பார்கள் என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுக் கூறினார். நேற்று எஸ்.பி.வேலுமணி வழக்கு, இன்று எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு என வேகமெடுத்திருப்பதால் இனி கண்கூடாக பல காட்சிகளை நீங்கள் பார்க்கலாம் என செய்தியாளர்களிடம் கூறினார்.

கொடநாடு வழக்கு
டெண்டர் ஊழல் வழக்கை போல் கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் இனி வேகமெடுக்கும் என நம்பிக்கை கூறிய ஆர்.எஸ். பாரதி, 2016ம் ஆண்டு கண்டெய்னரில் 570 கோடி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ உண்மையை சொல்லவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பிடிபட்டது ஒரு ரூபாய், 2 ரூபாயாக இருந்தால் பரவாயில்லை, 570 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது என்பதை மக்களுக்கு சொல்வதில் சிபிஐ க்கு என்ன தயக்கம் என வினவினார்.

உண்மை வெளிவரும்
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் வழக்கில் விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, யார் மீதும் வீண்பழி சுமத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது என்றும் அவ்வாறு இதுவரை சுமத்தியதும் இல்லை எனவும் தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதி நம்பிக்கையோடு பேசுவதை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவருக்கும் எதிரான வழக்குகளில் இனி பல்வேறு அதிரடிகள் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications