கிரைய பத்திரம்.. ரூ.2 கோடி நிலத்தில் விழுந்த செட்டில்மென்ட் ஆவணம்! சென்னை சோழிங்கநல்லூரை வளைத்த ராணி
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலங்கள் பதியப்படுவதை தடுக்க, பத்திரப் பதிவு துறை ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் மோசடிகள் பெருகி வருகின்றன. குறிப்பாக பவர் பத்திரம் வைத்து இந்த மோசடிகள் அதிகமாகின்றன. பவர் பத்திரம் என்றால் என்ன? இந்த பவர் பத்திரத்தை வைத்து, மோசடி செய்து, கடந்த 2 நாளில் மட்டும் 8 பேர் சென்னையில் கைதாகியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
பவர் பத்திரம் என்பது, ஒரு சொத்தின் உரிமையாளர், தனக்கு சொந்தமான சொத்தின் மீது சில குறிப்பிட்ட அதிகாரங்களை இன்னொருவருக்கு வழங்குவதாகும்.. இந்த பத்திரம் சொத்தின் உரிமையாளர் இல்லாத போது அல்லது வேறு சில காரணங்களுக்காக அந்த சொத்தை நிர்வகிக்க மற்றொருவரை நியமிக்கும்போது பயன்படுத்தப்படுவாகும். இதை வைத்துதான், பத்திரப்பதிவு துறையில் மோசடிகள் நடக்கின்றன.

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு, வருவாய்த்துறைகளில் அதிகப்படியான பணம் புழங்குகிறது.. இதனாலேயே லஞ்ச லாவண்யங்கள் பெருகுகின்றன.. அதேபோல, போலியான ஆவணங்களை அச்சு அசல் ஒரிஜினல் போலவே தயார் செய்துவிடுகிறார்கள் மோசடிப்பேர்வழிகள்..
இந்த போலி பத்திரங்களை வைத்துக்கொண்டு, நில அபகரிப்பு முதல் லஞ்சம் பெறுவது வரை ஏராளமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்காரணமாக, பத்திரங்களை பதிவதிலும், மோசடிகள் பெருகிவருகின்றன.
போலி ஆவணங்கள்
இவைகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பதிவுத்துறையை முற்றிலும் ஆன்லைன்மயமாக்கியும்கூட, இடைத்தரகர்களின் தலையீடுகள் குறைந்துள்ளதே தவிர, லஞ்சமும் மோசடியும் குறையவில்லை.. இதனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும், மோசடி செய்வோரின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதோ சென்னையில் மறுபடியும் ஒரு கொடுமை நடந்துள்ளது
ஆயிரம்விளக்கு, சபிமுகமது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்.. இவருக்கு 68 வயதாகிறது.. சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:
"எனக்கு சோழிங்கநல்லுார் தாலுகா, மடிப்பாக்கம் கிராமத்தில், 2,840 சதுர அடி நிலம் உள்ளது. அவற்றை சிலர், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து உள்ளனர். எனவே, என் சொத்தை அபகரித்தவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
நிலமோசடி - பரிதாப ராணி
இந்த புகாரின் அடிப்படையில், நிலமோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் ராணி என்பவர் பெயர் அடிபட்டது.. இவர் தி.நகரைச் சேர்ந்தவர்.. ராணிக்கு 65 வயதாகிறது..
கிரையம் பெற்றது போல் போலி ஆவணம் பதிவு செய்ததுடன், அவரது மகன் ரமேஷ் குமாருக்கு செட்டில்மென்ட் ஆவணம் பதிவு செய்து கொடுத்தது போன்று, ஆவணத்தை தயாரித்திருக்கிறார்கள்.. பிறகு கந்தன்சாவடியைச் சேர்ந்த செல்வநாகராஜன் என்பவருக்கு, போலியாக பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது..
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட, தி.நகரைச் சேர்ந்த ராணி, 65, ரமேஷ்குமார், 40, செல்வநாகராஜன், 57, மற்றும் சங்கர், 36, ஆகிய 4 பேரையும், போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பவர் ஆஃப் அட்டர்னி
2 நாட்களுக்கு முன்புதான் சென்னை ஆவடியில் இதுபோலவே பவர் ஆஃப் அட்டர்னி மோசடி நடந்தது.. அனிதா என்பவர், 9,000 சதுர அடி நிலத்தை வாங்கி, ரெட் ஹில்ஸில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 54.48 லட்சத்திற்கு விற்பனை தொகைக்கு சொத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.. வாங்குபவர்களில் ஒருவர் தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியை விற்கச் சென்றபோதுதான், அது புறம்போக்கு நிலம் என்பதே அவருக்கு தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக 4 பேர் கைதாகியிருந்த நிலையில், மீண்டும் தி.நகரில் 4 பேர் கைதாகியிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications