Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RTE: மாணவர் விவரம் தாக்கல் செய்ய தனியார் பள்ளிகளுக்கு அக்.31 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் (Right to education) 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைத் தனியார் பள்ளிகள் தாக்கல் செய்ய காலஅவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவர் விவரம் தாக்கல் செய்யும் கால அவகாசத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டம்

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான 25 சதவீத இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால், ஆர்டிஇ சேர்க்கையை நம்பியிருந்த பெரும்பாலான பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

rte-deadline-extended-for-private-schools-to-file-student-details-till-oct-31

மாணவர் விவரம்

இந்நிலையில், நடப்பாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் மனு

அந்த மனுக்களில் கூறியதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல் நடப்பாண்டில், 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால், சில பள்ளிகளில் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நிரப்பப்படவில்லை. எனவே, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைப் பெற்ற மாணவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

இந்த வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்றது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதனால் சுற்றறிக்கை வெளியிட தாமதமானது.

மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 717 பள்ளிகளில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் நோக்கத்திலேயே தற்போது பட்டியல் தனியார் பள்ளிகளிடம் கேட்கபட்டுள்ளது. தனியார் பள்ளி இயக்குநர் காலதாமதமாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மட்டுமே வழக்குத் தொடர முடியும்.
சங்கங்கள் இதனை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்று வாதிட்டார்.

கல்விக் கட்டணம்

இதைத்தொடர்ந்து, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கோரி ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வழக்குகள் தொடர்ந்துள்ளன. தற்போது அந்தத் தொகையை வழங்கும் நோக்கத்தில்தான் அரசு இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தனியார் பள்ளிகள் புதிதாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+