பகலில் லேடிஸ் ஹாஸ்டல்.. இரவில் உல்லாச உலகம்.. சென்னையை மிரள வைத்த விபச்சார பிஜி
சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் விபச்சாரம் நடப்பது உறுதியான நிலையில், விடுதி நடத்திய உல்லாச கும்பல் தலைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு சில இளம்பெண்கள் தங்கி வசித்து வருகிறார்கள். அவர்கள் பகலில் வேலைக்கு செல்வது போல டிப்-டாப்பாக உடை அணிந்து வெளியில் சென்றுள்ளார்கள்.. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் அது உண்மையிலேயே பெண்கள் தங்கும் விடுதி என்றே முதலில் நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் அந்த விடுதிக்கு, இரவு நேரத்தில் அடிக்கடி ஆண்கள் சத்தம் இல்லாமல் வந்து சென்றுள்ளார்கள். பெண்கள் விடுதியில் இரவு நேரத்தில் ஆண்களுக்கு என்ன வேலை? என்று அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக சமீப காலமாக இரவு நேரங்களில் ஆண்கள் வந்து சென்றதால், உண்மையில் அது வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி இல்லை என்பது உறுதியானது.. இதனிடையே உல்லாச தொழில் செய்யும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி என்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசியமாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்
இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், டி.பி.சத்திரம் பகுதியில் இயங்கி வந்த சந்தேகத்திற்கு உரிய விடுதியில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது விபச்சார தொழில் ஜோராக நடப்பது உறுதியானது.. போலீசார் நடத்திய சோதனையில் 4 அழகிய இளம்பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்தது உறுதியானது. இதையடுத்து அழகிகள் நான்கு பேரையும் மீட்ட போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த உல்லாச விடுதியை நடத்தி வந்தது ஜூடி என்ற அனு (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதம் அவர்தான் விபசார கும்பலின் தலைவியாக செயல்பட்டார் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications