10 நாள் பயிற்சி! ‘சின்னக் கவுண்டர்’ பம்பரக் காட்சியில் விஜயகாந்த்? மனம் திறந்த இயக்குநர்!
அந்தப் படத்தில்,சுகன்யா தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்டது சர்ச்சையாகப் பேசப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி வலுவான கதையைக் கொண்டதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
விஜயகாந்த் மறைந்தபோதுகூட எல்லா சேனல்களிலும் 'சின்னக் கவுண்டர்' சோகப்பாடல்தான் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.வி. உதயகுமார்.

அவர் அந்தக் காலத்தில் ஏற்பட்ட பம்பரக் காட்சிக்கு இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். கூடவே விஜயகாந்த்தின் தங்க மனசு பற்றிப் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"நாங்க படம் சீரியசாக போய் கொண்டிருந்ததை உணர்ந்தோம். இடையில் ஒரு நகைச்சுவைக் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விஜயகாந்த்திடம் சொன்னோம். அதுதான் பம்பரம் விடும் காட்சி. முதலில் விஜயகாந்த் அதை எடுக்க முடியுமா என யோசித்தார். காமெடி என்றது ஏற்றுக் கொண்டார்.
அந்தக் காட்சியைக் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தோம். தொப்புள் பகுதியில் பம்பரம் விடும் போது அதில் உள்ள ஆணி, கூச்சத்தை ஏற்படுத்தும். அதைச் சமாளிப்பதற்காக பத்து நாள்கள் சுகன்யாவுக்குப் பயிற்சி கொடுத்தோம். அது ஒரு பெரிய கதை" என்றபடி பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்த உதயகுமார் விஜயகாந்த் பற்றிய தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

"இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் கூட நம்பவே முடியவில்லை சார். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஏழே நாளில் ஒரு படத்தை எடுப்பதாகத் திட்டமிட்டோம். அதற்காகப் பல நடிகர்களைப் பார்த்துக் கதை சொன்னோம்.
யாருமே எங்கள் மீது நம்பிக்கை வைத்து கால்ஷீட் கொடுக்கவில்லை. ஒருமுறை விஜயகாந்த்தைச் சந்தித்துக் கதை சொன்னோம். இப்ராஹிம் ராவுத்தரும் சேர்ந்து கதை கேட்டார். கடையில் படத்தில் நடிப்பதாக வாக்குறுதி தந்தார் ராவுத்தர்.
ஆனால், விஜயகாந்த்திற்கு நம்பிக்கை இல்லை. 'எப்படி ஏழே நாளி படத்தை எடுப்பீர்கள்' என்று கேட்டார். மூன்று இயக்குநர்கள் மூன்று யூனிட் ஆகப் பிரிந்து ஒரே நேரத்தில் தனித்தனியாகப் படப்பிடிப்பு செய்வோம் என்று விளக்கம் அளித்தோம்.

அதைக் கேட்ட விஜயகாந்த், 'கதை நல்லா இருக்கிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்போவதாகச் சொல்கிறீர்கள். அதற்கு ஏழு நாள் போதாது. நான் எழுபது நாள் கால்ஷீட் கூட கொடுக்கிறேன். எனக்கு ஏழு நாள் சம்பத்தையே கொடுங்கள். படத்தைச் சரியாக எடுங்கள்' என்று சொன்னார்.
அந்தக் காலத்தில் அவர் முன்னணி நடிகர். யார் அப்படிச் சொல்வார்கள் சொல்லுங்கள். அந்தளவுக்குத் திரைப்படக் கல்லூரி மாணவர்களாகிய எங்கள் மீது நம்பிக்கை வைத்தவர் விஜயகாந்த். அன்பான மனிதர் அவர்" எனத் தொடங்கும் போது விஜயகாந்த்தின் குணத்தை உச்சத்திற்குக் கொண்டுபோய் நிறுத்தி வைக்கிறார் இந்த சின்னக் கவுண்டர் இயக்குநர்.
"இப்படி 25 திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குநராக வளர்த்து விட்டவர் விஜயகாந்த். நான் அவருடன் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

மதுரையிலிருந்து வந்த சாதாரண மனிதன் சினிமாவில் இந்தளவுக்கு ஜெயித்தார் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. அது அவரது குணத்தால் மட்டும்தான் நடந்தது" என்று கண்கலங்குகிறார் உதயகுமார்
"திரைப்படக் கல்லூரி மாணவர்களை விஜயகாந்த் அளவுக்கு வாய்ப்பு கொடுத்த அடுத்த நடிகர் பிரபு. அவரை சந்தித்து நான் கதை சொன்னேன். அவர் நடித்துக் கொடுத்தார். 'உரிமை கீதம்' என்று டைட்டில் வைத்தோம். அதில் கார்த்திக்கூட சேர்ந்து நடித்தார்.
அந்த நேரத்தில் எனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. படம் ரிலீசுக்கு முன்னால் திருமணம். என்னை யார் என்றே அப்போது திரையுலகத்திற்குத் தெரியாது. என் கையில் அந்தக் காலத்தில் ஒரு 5 ஆயிரம் கூட இல்லை.
எப்போதோ அவரது படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன் என்பதற்காக, என் கல்யாணத்திற்கு 5 கார்களை டீசல் போட்டு அனுப்பி வைத்துவிட்டார். திருமணம் முடியும் வரை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி மதுரையிலிருந்து பண்ணை புரத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்.

யார் செய்வார்கள்? எனக்கும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அப்படி உதவினார். அவரைக் கறுப்பு எம்.ஜி.ஆர் என்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. அவர் உதவுவதில் எம்.ஜி.ஆருக்கு இணையானவர்தான்" என்கிறார்.
"எனது 'கிழக்கு வாச' வெளியான பிறகு ராவுத்தர் என்னை அழைத்தார். நான் ஒரு கிரமத்துப் படம் பண்ணுவோம் என்று சொன்னேன். அப்போது ஆக்ஷன் படங்கள் என்றால் விஜயகாந்த் என்று தோற்றம் இருந்தது. எப்போதும் மிஷின் கன் வைத்துக் கொண்டு சண்டை போடும் ஹீரோவாகவே அவர் இருந்தார். எனவே கிராமத்துப் படம் செட் ஆகுமா என ராவுத்தர் கேட்டார்.
நான் முழுக்கதையைச் சொல்லவில்லை. ஒன் லைன் சொன்னேன். ஒருவன் துண்டு எடுத்து இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறான் என்று அர்த்தம். தோளில் போட்டால் பஞ்சாயத்துக்குப் போகிறான் என்று அர்த்தம். துண்டை எடுத்து கீழே வைத்தால், பட்டையைக் கிளப்பப் போகிறான் என்று அர்த்தம் என்று சொனேன்.
அவன் நடந்து போனால் ஊரே தலை வணங்கி நிற்கும். அப்படிப்பட்ட ஒரு ஆள் ஊர் ஜனங்கள் முன்னாடி தலைகுனிந்து போகிறான். அதற்கு என்ன காரணம்? அதுதான் கதை என்றேன்.
உடனே விஜயகாந்த்திடம் சொல்லி அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தநேரத்தில் 'பரதன்' படம் கோயமுத்தூரில் இரவில் ஷூட்டிங் நடக்கும். அது ஆக்ஷன் படம். அதிகாலை 5 மணி முதல் பகலில் பொள்ளாச்சியில் 'சின்னக் கவுண்டர்' ஷூட்டிங் நடக்கும். இது அப்படியே கிராமத்துப் படம். 'சின்னக் கவுண்டர்' வெளியாகி 110 நாட்கள் ஓடியது. பட்டி தொட்டி எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது" என்கிறார்.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications