தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு நல்ல முதல்வரை நாம் பார்க்க முடியவில்லை.. எஸ்ஏ சந்திரசேகர்
சென்னை: தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு நல்ல முதல்வர் அமையவில்லை என இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முதல்வர் வேடத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருந்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ் ஏ சந்திரசேகர், சிம்பு, எஸ் ஜே சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளர்
இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் டைம் லூப் கான்செப்ட்டில் இருப்பதால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மக்களிடையே நல்ல ரீச் கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் சிம்புவை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

எஸ் ஏ சந்திரசேகர் பேச்சு
இந்த விழாவில் எஸ்ஏ சந்திரசேகர் பேசுகையில் காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை. முதல்வர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை. படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும் வாரிசு அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது.

வந்திருக்க வேண்டும்
நடிகர் சிம்பு வெற்றி விழாவிற்கு வந்திருக்க வேண்டும். வெற்றி வந்தவுடன் இப்படி நடந்து கொள்ளக் கூடாது. தயாரிப்பாளர் சிம்புவை நம்பி எவ்வளவு முதலீடு செய்துள்ளார். அவர் பங்கேற்காதது மனதுக்கு கடினமாக இருக்கிறது. படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ அதே போல் படத்திற்கு பிறகும் இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும்.

உயரத்தில்
இந்த படம் சிம்புவுக்கு ஒரு பெரிய திருப்பமாகும். இந்த மகிழ்ச்சியை கொண்டாட அவர் வரவில்லை. என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை. இந்த படம், சிம்புவை நீண்ட நாட்களுக்கு பிறகு உயரத்தில் கொண்டு போய் அமர வைத்திருக்கிறது என்றார் எஸ் ஏ சந்திரசேகர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications