முன்கூட்டியே மரணத்தை கணித்தாரா எஸ்பிபி.. கடந்த ஜுன் மாதம்.. தன் சிலைக்கு தானே ஆர்டர் தந்த ஆச்சரியம்
சென்னை: தன் மரணத்தை முன்பே கணித்துவிட்டாரா எஸ்பிபி என தெரியவில்லை.. தன் சிலையை ஜூன் மாசமே ஆர்டர் தந்திருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
"பாடும் நிலா எஸ்பிபி" இறந்து இத்தனை நாள் ஆகியும், அந்த தாக்கம் இன்னும் போகவில்லை.. ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.
இதனிடையே எஸ்பிபி பற்றின ஒவ்வொரு தகவல்களும் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.. தற்போது தன்னுடைய சிலையை டிசைன் செய்வதற்காக கடந்த ஜுன் மாதம் எஸ்பிபியே ஆர்டர் தந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் தன் மரணத்தை முன்கூட்டியே அவர் கணித்துவிட்டாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

ஆந்திரா
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இவரது சொந்த வீடு உள்ளது.. இதை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்திற்கு வேத பாடசாலை தொடங்குவதற்காக தானமாக தந்துள்ளார்.. மேலும், இந்த இடத்தில் அவருடைய பெற்றோர்களின் சிலையை வைக்கவும் ஆசைப்பட்டார்.. சாமமூர்த்தி - சகுந்தலா என்பது பெற்றோரின் பெயர்.. இவர்கள் 2 பேருமே உயிருடன் இல்லை என்பதாலும், பெற்றோர் மீது அளவு கடந்த பிரியம் என்பதாலும், சிலையை வைக்க விரும்பினார்.

ராஜ்குமார்
இதற்காக சிற்பி ராஜ்குமார் உடையாரை அணுகி உள்ளார்.. அவர் கோதாவரி மாவட்டம் கொத்தப்பேட்டையை சேர்ந்தவர்.. பெற்றோரின் சிலையை செய்ய ஆர்டர் தந்திருக்கிறார்.. அந்த வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, கடந்த ஜுன் மாதம் திடீரென்று சிற்பி ராஜ்குமாருக்கு எஸ்பிபி போன் போட்டு பேசினாராம்.

சிலை
தனக்கும் ஒரு சிலை செய்யுமாறு அப்போது எஸ்பிபி சொன்னாராம்.. லாக்டவுன் என்பதால், நேரில் வந்து சிலை சம்பந்தமாக பேச முடியவில்லை என்றும், சிலை செய்வதற்கான அளவுகளை இ-மெயில் மூலமாகவே அனுப்பி வைப்பதாகவும் சொல்லி உள்ளார்.. அதன்படியே தன் போட்டோவை ராஜ்குமாருக்கு மெயில் அனுப்பியிருக்கிறார் எஸ்பிபி... அந்த போட்டோவை பார்த்து, ராஜ்குமாரும் சிலையை வடிவமைத்துவிட்டார்.

மரணம்
அச்சு அசல் எஸ்பிபி போலவே இருக்கிறது அந்த சிலை.. ஆனால், லாக்டவுன் இன்னும் நீடிப்பதால், சிலையை உடனே தர முடியாமல் தன்னுடனேயே வைத்திருந்திருக்கிறார்.. லாக்டவுன் முடிந்தபிறகு ஒப்படைக்கவும் முடிவு செய்திருந்த நேரத்தில்தான், எஸ்பிபி மரணம் என்ற செய்தி வந்துள்ளது. இந்த சிலை தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சந்தேகம்
ஒருவர் உயிருடன் இருக்கும்போது சிலைகளை வடிவமைத்து கொள்வதும், நிறுவி கொள்வதும் கிடையாது.. ஆனால், எஸ்பிபி ஏன் ஜுன் மாசமே தன்னுடைய சிலைக்கான ஆர்டர் தந்தார்? இத்தனைக்கும் அந்த சமயத்தில் அவர் திடகாத்திரமாகவே இருந்தும் ஏன் சிலையை செய்தார்? தன் மரணத்தை அவர் முன்கூட்டியே கணித்தாரா? தன் மரணத்தை பற்றி ஏதாவது அவருக்கு உள்ளுணர்வு தோன்றியிருக்குமா? என்ற பெருத்த ஆச்சரிய கேள்விகள் மக்களிடையே எழுந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications