சபரிமலையில் குளறுபடி.. என்ன நடக்குது? ஸ்டாலின் கேட்ட கேள்வி.. கேரளாவிற்கே போனை போட்ட சிவ்தாஸ் மீனா
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
சபரிமலை சீசன் உச்சத்தில் உள்ளது, அங்கே அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக அதிகாரிகள் திணறி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். பம்பையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் காரணமாக அங்கே அதிகாரிகள் திணற தொடங்கி உள்ளனர்.

சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல், எரிமேலி பகுதியிலும் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அடிப்படை வசதிகள்: நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 வருடங்களில் இருந்ததை விட கூடுதல் கூட்டம் இந்த முறை கோவிலில் உள்ளது. இதனால் அங்கே கடுமையான நெரிசல் உள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறும் சபரிமலை.. பேருந்து கிடைக்காமல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சிறுமி மரணம்: 36 மணி நேரம் வழிபாடு செய்ய காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சபரிமலைக்கு செல்லும் போது அப்பாச்சிமேடு பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி நிலைகுலைந்து விழுந்து உயிரிழப்பு. சிறுமிக்கு இதய பாதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது. சில நாட்களாக சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் இருப்பதால், பலர் ஐயப்பனை தரிசிக்காமலேயே வீடு திரும்புகின்றனர்; பதினெட்டாம் படியில் ஏற 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது! காட்டுப்பாதை வழியே பலர் உள்ளே நுழைவதாலும், சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை: இந்த நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச் செயலாளர் உடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் கேரள மாநில தலைமைச் செயலாளர் வி. வேணு, இ.ஆ.ப., அவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications