மூளையில் ரத்தக்கசிவு.. ஜக்கி வாசுதேவுக்கு அவசர அறுவை சிகிச்சை.. டெல்லி அப்போலோவில் அனுமதி!
சென்னை: கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் திடீரென்று ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஈஷா மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பிரமாண்டமான ஆதியோகி சிலையை காண இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா ஈஷா மையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில்கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தார். மேலும் நடிகர், நடிகைகள் உள்பட பல துறை பிரபலங்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அதிக தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர் வினித் சூரி எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஜக்கி வாசுதேவின் மூளையில் ரத்த கசிவு கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு உடனடியாக மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து டாக்டர்கள் வினித் குரு, பிரணவ் குமார், சுதீர் தியாகி, சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மருத்துவமனையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தது. மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை என்பது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இதையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
இதுபற்றி ஈஷா அறக்கட்டளை சார்பில், ‛‛ கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications