ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்! அவர் அற்புதமான மனிதர்! சாயிரா பானுவின் உருக்கமான ஆடியோ
சென்னை: ஏ.ஆர். ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர் என மனைவி சாயிரா பானு ஒரு ஆடியோ மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். சாயிரா பானுவின் விவாகரத்து அறிவிப்புக்கு ஏ.ஆர். ரகுமானை பலர் தரம் தாழ்த்தி விமர்சித்து வந்த நிலையில் சாயிரா பானு உருக்கமான வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எத்தனையோ விருதுகளை வாங்கியிருந்தாலும் ஆஸ்கர் விருது மூலம் தமிழர்களை உலக அரங்கில் பெருமைப்பட வைத்தவர். இவர் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்துள்ளதால் தான் எத்தனை உயரம் பறந்தாலும் தலைக்கணம் இல்லாமல் அனைவருடனும் பழகி வருகிறார்.

குஜராத்தை சேர்ந்த சாயிரா பானுவுக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் பெரியவர்கள் சம்மதத்துடன் கடந்த 1995 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் அன்னியோன்னியமான தம்பதியாகவே உலா வந்தனர். எந்த பேட்டியாக இருந்தாலும் வெட்கத்துடன் தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான் சாயிரா பானு, கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாயிரா பானு அறிவித்திருந்தார்.
சாயிரா பானுவின் இந்த முடிவை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்தார். இந்த விவாகரத்து குறித்து பலர் பல விதமாக பேசி வந்தனர். இதில் உண்மையே தெரியாமல் மிஸ்டர் கிளீன் என அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் மீது பல யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பினர்.
இந்த நிலையில் மனைவியுடனான விவாகரத்து குறித்து தன் மீது அவதூறு பரப்புவதாகவும் சில யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும், சிலர் கற்பனையில் பேட்டி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரகுமான், அந்த வீடியோக்கள், கட்டுரைகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டபிரிவு பதிவு செய்யப்படும் என்றும் அந்த வக்கீல் நோட்டீஸில் ஏ.ஆர்.ரகுமான் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானு, விவாகரத்து முடிவு குறித்து ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் "ஏ.ஆர்.ரகுமான் குறித்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். அவர் உலகிலேயே சிறந்த மனிதர். அவரை போன்ற ஒரு அற்புதமான மனிதரை பார்க்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications