Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் புகார்கள் ஒரு பக்கம் கிடக்க! சேலம் பல்கலை துணைவேந்தராக மீண்டும் பதவியேற்றார் ஜெகநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து இன்று பதவியேற்றுக் கொண்டார்.

துணை வேந்தராக தொடர்வதற்கான கோப்புகளில் ஜெகநாதன் கையெழுத்திட்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றுக் கொண்டார்.

tamil nadu governor salem

முன்னதாக இவருடைய பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகள் நடந்ததை அடுத்து அவரது பதவிகாலத்தை நீட்டிக்க தமிழக அரசு விடாது என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருடைய பதவிக்காலத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட்டித்து உத்தரவிட்டார்.

இதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று ஜெகநாதன் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றுக் கொண்டார்.

பின்னணி என்ன: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் தனியாக கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அரசு அலுவலர்களை பயன்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகின.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை ஜெகநாதன் தொடங்கியதாக புகார் எழுந்தது. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கி உள்ளார் துணைவேந்தர் ஜெகநாதன். அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்தார். இது உறுதி செய்யப்பட்டதால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியது.

பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளனர். ஊழல் புகாரில் சிக்கிய ஜெகநாதனை பணி நீட்டிப்பு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து சட்டசபையிலும் கேட்கப்பட்டது. சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி , சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் . உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதனுக்கு , வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+