சீமானுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.. சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்
சென்னை: சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீப கால செயல்பாடுகள் மற்றும் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறி விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் சமீபகாலமாக பிடிக்கவில்லை என்று கூறி அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருகிறார்கள்.

அண்மையில் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இவ்வாறாக அடுத்தடுத்து நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருவதால் நாம் தமிழர் கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஜெகதீஷ். இந்த நிலையில் கட்சியில் சமீப கால செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தம் அளிப்பதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.. சேலம் மேற்கு M.Sc., M.Phil DML,Ph.D. ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும், சமீப கால செயல்பாடுகள் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன்.. நன்றி... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்!












Click it and Unblock the Notifications