உங்க அரசியலுக்கு.. என் பெயரை இழுக்காதீங்க! கலங்கிப்போன சமந்தா.. கேடிஆர் விவகாரத்தில் ஷாக் பேச்சு
சென்னை: தயவு செய்து எனது பெயரை உங்கள் அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வைக்க கேட்கிறேன்? நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்., என்று நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா நடிகை சமந்தா குறித்து பேசிய விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளன. அமைச்சர் கேடி ராமராவ் இதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமராவ் நடிகை சமந்தாவை படுக்கைக்கு அழைத்ததாக தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் தெலுங்கு சினிமாவில் பெண்கள் பலர் விரைவாக திருமணம் செய்ய கே.டி.ராமராவ்தான் காரணம். அவரால் பயந்து கொண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பெண்களையும் அவர் விடவில்லை.
சமந்தா வேண்டும் என்று கே.டி.ராமராவ் கேட்டார். அதற்கு நாகார்ஜுனா ஒப்புக்கொண்டார். ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் சாய் அக்கினேனியை விவாகரத்து செய்தார். வீட்டு ஆண்களுக்கு போதை பொருள் கொடுப்பது கே.டி.ராமராவ் வழக்கம். அவர்களை அடிமையாக்கி.. அவர்கள் வீட்டில் இருக்கும் நடிகைகளை கேட்பதுதான் கே.டி.ராமராவ் ஸ்டைல் என்று கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
சமந்தா பதிலடி: இதற்கு சமந்தா அளித்த விளக்கத்தில், ஒரு பெண்ணாக இருப்பது, வெளியில் வந்து வேலை செய்வது, பெண்கள் எளிதில் சாதிக்க முடியாத ஒரு துறையில் சாதிப்பது, அதே துறையில் காதலில் விழுவது & காதலில் இருந்து விலகுவது, இந்த நொடி கூட நின்று போராடுவது... இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு நிறைய தைரியம் மற்றும் வலிமை தேவை.
கொண்டா சுரேகா என்னுடைய பயணத்தை அசிங்கப்படுத்தி பேசி உள்ளார். நான் மேற்கொள்ளும் இந்தப் திரை பயணம் என்னை மாற்றியதில் பெருமை அடைகிறேன், தயவு செய்து அதை சிறுமைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகள் சாதாரணமாவை அல்ல. உங்கள் வார்த்தைகளுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பு உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தனிநபர்களின் தனியுரிமைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். பொறுப்பாகவும் மரியாதையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பர்சனல் விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருப்பது எங்கள் விருப்பம். அதற்காக.. அதில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. சர்ச்சைகளை பரப்பலாம் என்று நினைக்காதீர்கள்.
எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கமாகவும் இருந்தது, இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை உங்கள் அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வைக்க கேட்கிறேன்? நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்., என்று நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
பின்னணி: நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர். நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார். இந்த பிரிவிற்கு கே.டி.ராமராவ்தான் காரணம் என்று கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications