நடிகை மீதும் தனி வழக்கு! விஜய்யுடன் உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கு! ரிலீஸ் செய்வேன்! சங்கீதா
சென்னை: விஜய்யுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வரும் நடிகை யாரென்பதை சங்கீதா, அந்த மனுவில் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் அந்த நடிகை மீது தனியாக வழக்கு தொடர்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே லண்டனில் வளர்ந்தார் (அவரது தந்தை தொழிலதிபராக லண்டனில் இருந்தவர்). அவரது தந்தை பெயர் சொர்ணலிங்கம், தாய் நிர்மலா சொர்ணலிங்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

1990களின் பிற்பகுதியில் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தபோது தொடங்கியது. ஒரு படப்பிடிப்பின்போது சந்தித்து, பின்னர் அவரது வீட்டுக்கு அழைக்கப்பட்டு, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா, சங்கீதாவின் பெற்றோரை சந்தித்து பேசி, திருமண ஏற்பாடு செய்தனர்.
திருமணத்திற்கு முன்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள 3 ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில் ஆகஸ்ட் 25, 1999 அன்று திருமணம் நடைபெற்றது. மகன் ஜேசன் சஞ்சய் (2000), மகள் திவ்யா சாஷா (2005). இருவரும் சில விஜய் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொதுவாக எந்த ஒரு சினிமா விழா, திருமண விழாக்கள், விருது வழங்கும் விழா, இசை வெளியீட்டு விழா என்றால் சங்கீதாவும் கலந்து கொள்வார். ஆனால் அண்மைக்காலமாக சங்கீதாவை விஜய்யுடன் பார்க்க முடியவில்லை.
இதனால் அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை இருக்குமா என சந்தேகம் எழுந்தது. கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய்யுடன் சங்கீதா வந்திருந்தார். அத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக அவர் விஜய்யுடன் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.
தனது குழந்தைகள் லண்டனில் படித்து வருவதால் அவர்களுக்கு துணையாக சங்கீதா சென்றிருப்பதாக சொல்லப்பட்டது. இத்தனைக்கும் தவெக எனும் கட்சியை விஜய் தொடங்கிய போது கூட சங்கீதா வரவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னைக்கு வந்திருந்தார் சங்கீதா. இதனால் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் விஜய் நடத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலை தற்போது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "எனது கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பிருக்கிறது. அந்த தொடர்பை 2021 ஆம் ஆண்டு கண்டுபிடித்து கண்டித்தேன்.
ஆனால் அவரோ சிறிதும் வருத்தமின்றி என்னை ஒதுக்கிவிட்டு நடிகையுடன் உறவை தொடர்ந்தார். அவ்வப்போது எனது கணவருடன் அந்த நடிகை வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்கிறார். அங்கு என் கணவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிடுவதால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் இது அவமானமாக இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக நானும் அவரும் பிரிந்து வாழ்கிறோம். எங்களது திருமண வாழ்வு எப்போதோ முறிந்து விட்டது. ஆவணங்களில் மட்டுமே கணவன் மனைவியாக இருக்கிறோம். நடிகையின் பெயரை சொல்லாமல் இப்போது தவிர்க்கிறேன். ஆனால் தேவைப்பட்டால் வழக்கு தொடர்வேன். என் கணவருக்கும் நடிகைக்கும் இருக்கும் உறவு குறித்து ஆதாரங்களை வெளியிடுவேன் என சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications