சென்னை தலைமை செயலகத்தை 28 ஆம் தேதி முற்றுகையிடுவோம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு!
சென்னை: வரும் டிசம்பர் 28 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை அரசு தரப்புடன் சமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அம்பத்தூரில் நடைபெற்ற முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டப் போராட்டங்களில் ஈடுபட்ட பணியாளர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பெண் தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications