கவுசல்யாவிற்கு மாலை கொடுத்த சங்கரின் பாட்டி.. வாழ்த்திய சங்கரின் பெற்றோர்.. நெகிழ்ச்சி நிமிடம்
மறுமணம் செய்திருக்கும் உடுமலைபேட்டை கவுசல்யாவிற்கு சங்கரின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: மறுமணம் செய்திருக்கும் உடுமலைபேட்டை கவுசல்யாவிற்கு சங்கரின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு கவுசல்யா சட்ட போராட்டம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.

பல கேள்விகள்
இந்த நிலையில் இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் கவுசல்யாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அதே சமயம் தற்போது கொல்லப்பட்ட சங்கரின் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்றும் சிலர் கேள்விகளை கேட்டு இருந்தனர்.

ஆனால் மகிழ்ச்சி
ஆனால் இந்த திருமண நிகழ்வில் சங்கரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரின் பெற்றோர் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் சங்கரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

மாலை கொடுத்தார்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கவுசல்யா - சக்தி திருமணத்திற்கு மாலை கொடுத்ததே சங்கரின் பாட்டிதான். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார். அவர்கள் காலில் விழுந்து தம்பதிகள் மரியாதை செய்தனர்.

வாழ்த்து தெரிவித்தனர்
அதேபோல் சங்கரின் பெற்றோர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் தம்பதிகளை வாழ்த்திய சம்பவம் அங்கு பலருக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications