கடலுக்குள் ஓகே தான்.. கருணாநிதி பேனா நினைவு சின்னம் உயரத்தை 2 அடி குறைங்க.. சரத்குமார் சொன்ன காரணம்!
பேனா நினைவுச் சின்னத்தை 132 அடியில் அமைக்க வேண்டும் என சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார் கருணாநிதி. தற்போது அந்த சிலையோடு ஒப்பிட்டு அதனை விட உயர்வாக பேனா நினைவுச்சின்னம் என்றில்லாமல் ஒரு அடி குறைத்து வைத்தால் அது முறையாக இருக்கும் என சமக தலைவர் சரத்குமார் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்கும் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி, கருணாநிதிக்கு பார்போற்றும் புகழுடன் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு
இதுதொடர்பாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1969 முதல் 2018 வரை திமுகவின் தலைவராகவும், 1969 முதல் 2011 வரை 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்து தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்து, தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து, தேசியத் தலைவராக உயர்ந்தவர் கருணாநிதி. முற்போக்கு சிந்தனையாளராக, பகுத்தறிவாளராக, இலக்கிய பேச்சாளராக, 5 முறை தமிழ்நாட்டை ஆட்சிபுரிந்து தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி சிறந்து விளங்கிய கருணாநிதியை அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தலைமுறையின் ஒப்பற்ற தமிழினத் தலைவர் என்று அனைவரும் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இடம் தான் சர்ச்சை
ஒரு சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளருக்கு, தமிழ் கலை, இலக்கியத்தை பேணிப் பாதுகாத்தவருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் சிறந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று தான். அதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், நினைவுச் சின்னத்தை அமைக்கும் இடம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நிச்சயமாக பேனா நினைவுச் சின்னத்தை கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முடியாது. நினைவுச்சின்னம் என்பது வேறு, நினைவிடம் என்பது வேறு. தாஜ்மஹால் உள்ளிட்ட உலகளவில் அமைக்கப்பட்ட பல நினைவுச் சின்னங்கள் சுற்றுலா மையங்களாக உருப்பெற்று அவர்களது புகழை தலைமுறை கடந்தும், நூற்றாண்டுகள் கடந்தும் நிலைபெற்று வாழச் செய்கிறது.

நினைவுச் சின்னம் அவசியம்
ஒவ்வொரு தலைவருக்கும் நினைவுச் சின்னம் அமைப்பது என்பது அவசியம். 1076 கி.மீ நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரையை எடுத்துக்கொண்டால், வெளிநாடுகளில், தீவுகளில் காணக்கிடைப்பது போல மெரீனாவில், அதுவும் சென்னை கடல் பகுதியில் கடல் ஆமைகள், பவளப்பாறைகள் இல்லை என்று தான் ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி பவளப்பாறைகள் இங்கு அமைந்திருந்தால் ஆழ்கடல் நீச்சலுக்கான (Scuba Diving) சுற்றுலாத்தளமாக இது எப்படி உருவாகியிருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை. நினைவுச்சின்னம் அமைக்க மெரீனா கடற்கரையில் இருந்து 1180 அடி தொலைவில் வங்கக்கடலுக்குள் செல்ல இருப்பது பெருந்தொலைவாக தெரியவில்லை.

ஒரு அடி குறைக்கலாம்
ஆனால், இதை விடச் சிறந்த ஓர் இடம் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்ய முடிந்தால், கருணாநிதிக்கு எவ்விடத்தில் நினைவுச்சின்னம் அமைத்தாலும் அது புகழைச் சேர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகப்பொதுமறையான திருக்குறளை வழங்கி தமிழின் பெருமையை உலகறியச் செய்த திருவள்ளுவரை போற்றும் விதமாக, கன்னியாகுமரியில் கருணாநிதி 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார். தற்போது அந்த சிலையோடு ஒப்பிட்டு அதனைவிட உயர்வாக நினைவுச்சின்னம் என்றில்லாமல் ஒரு அடி குறைத்து வைத்தால் அது முறையாக இருப்பதுடன், கருணாநிதி புகழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் செயலாக அமையும்.

தமிழன் என்று சொல்லும் அனைவரும்
தமிழ் உணர்வு கொண்டவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழைப் போற்றுகிறவர்கள், தமிழன் என்று சொல்கின்ற அனைவரும் இந்த பேனா நினைவுச் சின்னம் உருவாக்குவதில் பங்கேற்க வேண்டும். நினைவுச்சின்னம் அமைக்கும் பணியை அரசு தான் செய்ய வேண்டும் என்றில்லாமல், தமிழினத்திற்கு பொதுவானவரை கெளரவிக்கும் பணி நமக்கான ஒன்றாக எடுத்துக்கொண்டு, உணர்வு கொண்ட தமிழர்கள் ஒன்றிணைந்து, இந்த உலகத் தமிழின தலைவருக்கு நிச்சயமாக ஓர் நினைவுச்சின்னம் எழுப்புவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications