கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு... சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சரத்குமார் கடிதம்..!
சென்னை: நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கம் தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவு செய்து நாளை 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்னும் உழைப்பை அதிகரிப்பீர்கள் என தாம் நம்புவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

14-ம் ஆண்டில் ச.ம.க.
''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் கடந்து 14 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஓர் மகிழ்ச்சி, பூரிப்பு, பிரம்மிப்பு, புத்துணர்ச்சி பெற்றார்போல ஓர் உணர்வு. ஆம், 31 ஆகஸ்ட், 2007 காலை இயக்கத்தைத் தொடங்கும்போது இருந்த அதே உற்சாகம்தான் இன்றளவும் பலரிடம் என்னால் பார்க்க முடிகிறது''.

சோதனை ஆண்டு
''பல சோதனைகளைக் கடந்து, வெற்றி, தோல்விகளை சமமாக பகிர்ந்து சோர்வடையாமல் தொடரும் நம் பயணத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இந்த ஆண்டு சரித்திரத்தில் இடம்பெறும் ஆண்டாக, நம் வாழ்க்கையை, நம் செயல்களை, நம் முன்னேற்றத்தை, நம் வளர்ச்சியை ஏன் உலகமே சுற்றுவதை நிறுத்திவிட்டது போல, ஒரு சோதனையான ஆண்டாக அமைந்துவிட்டது''.

புதிய உத்வேகம்
''கரோனா என்ற தொற்றின் ரூபத்தில் பல சகோதர, சகோதரிகளை, உற்றார், உறவினர்களை, நம் சொந்தங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் 14-ஆம் ஆண்டு சிறப்பாக அமைய பாடுபடுவோம்''.

சரத் கடிதம்
''நம் எண்ணங்கள், நம் இலக்கு வெற்றி பெற, நேர்மையான உழைப்பு அவசியம். அந்த உழைப்பை அதிகரிப்பீர்கள் என நம்புகிறேன். உழைப்பும், உறுதியும் நம்மை நிச்சயம் வெற்றிப்பெறச் செய்யும் என்ற என் நம்பிக்கைக்கு உறுதுணையாக செயல்பட உங்களை கேட்டுக் கொள்கிறேன்''. இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கூறியிருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications