முதுகுளத்தூரில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் வெற்றி.. அதிமுகவை முந்தி தவெக இரண்டாம் இடம்!
சென்னை: முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டுகள் எண்ணிக்கையின் ஆரம்ப கட்டத்தில் சசிகலா கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெற்று இருந்தார். இறுதியில், முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சசிகலா - ராமதாஸ் என 5 முனை போட்டி ஏற்பட்டது.

முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை எதிர்த்து அதிமுக சார்பாக மலேசியா பாண்டி போட்டியிட்டார். சசிகலா தரப்பு வேட்பாளர் டாக்டர் ராம் குமார் இங்கு களமிறங்கினார். தபால் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் முதல் கட்டமாக சசிகலா கட்சியின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றது. இறுதியில் முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுள்ளார். 68,003 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வாக்குகள்
* ஆர். எஸ் ராஜகண்ணப்பன் - திமுக - 68,003
* மலர்விழி - தவெக - 51,405
* எஸ் பாண்டி - அதிமுக - 47,501
* டாக்டர் ரா. ராம்குமார் - அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சசிகலா கட்சி)- 40,422
வேட்பாளர்கள்
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் - திமுக
ச. பாண்டி - அதிமுக
சந்திர பிரபா ஜெயபால் - நாம் தமிழர் கட்சி
மலர்விழி B - தமிழக வெற்றிக் கழகம்
மு. இருளாண்டி - நாடாளும் மக்கள் கட்சி
ஆ. சரவணக்குமார் - நாம் இந்தியர் கட்சி
கு. செந்தில்மள்ளர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி
கு. செல்வராஜ் - புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி
ச. மலைச்செல்வம் - புதிய தமிழகம்
டாக்டர் ரா. ராம்குமார் - அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்












Click it and Unblock the Notifications