என்டிஏ கூட்டணியில் தினகரன்.. கேள்வியை முடிப்பதற்குள் சசிகலா சொன்ன பதில்! விஜய் பேரை கூட சொல்லலையே!
சென்னை: என்டிஏ கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இணைந்தது குறித்து சசிகலாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பதை பாருங்கள். மேலும் அவரிடம் விஜய் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அண்ணா நினைவுநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் சசிகலா. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் பல்வேறு அரசியல் சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2013-ஆம் ஆண்டே ஜெயலலிதா ஆட்சியில் வேலை செய்யும் பெண்களுக்காக அதிக இடங்களில் தங்க விடுதிகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசு இப்போது அதை நாடு முழுவதும் செய்வதாக சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.
மாடு, ஆடு, கோழி வளர்ப்புக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டமும் ஜெயலலிதா கொண்டு வந்ததுதான். சென்னை, ஹைதராபாத், பெங்களூர் அதி வேக ரயில்வே திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தொண்டர்கள் களத்தில் இருப்பார்கள் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது பற்றி கருத்து கூற அவர் மறுத்துவிட்டார். மேலும் திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த சசிகலா, கிருஷ்ணராயபுரத்தில் கல்குவாரி முறைகேட்டை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டினார். திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரணை எப்படி நடக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.
நந்தனத்தில் உள்ள கலைக் கல்லூரியில் கேண்டீன், திமுகவினருக்கு குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு வேலை செய்த பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இது போன்ற சம்பவங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. ஐந்து முறை முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சாதித்தார்?
33 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொன்னாரே, அதில் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பவர்களுக்கு, ஜெயலலிதா ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் எப்படி இருந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா வழியில் மக்களாட்சியை கொண்டுவர தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். திமுக அரசை விரட்டி அடிப்போம்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
என்டிஏ கூட்டணியில் தினகரன் சேர்ந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு எது சரி என படுகிறதோ, அந்தந்த கட்சியில் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். அதில் நான் தலையிட்டு எதையும் சொல்ல முடியாது. என்னை பொருத்தமட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என திட்டமுள்ளது. அதை நான் நல்ல முறையில் செயல்படுத்துவேன். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications