நியாயம் வேண்டும்.. விஸ்வரூபம் எடுத்த சாத்தான்குளம் சம்பவம்.. இன்று தமிழகம் முழுக்க கடையடைப்பு!
சென்னை: கோவில்பட்டி சிறையில் அப்பா மகனின் மர்ம மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுக்க கடையடைப்பு நடக்க உள்ளது.
Recommended Video
கோவில்பட்டி சிறையில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு மர்ம மரணங்கள் தமிழகத்ததையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. கோவில்பட்டி சிறையில் நிகழ்ந்த மர்மம் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
அங்கு நடக்கும் தொடர் போராட்டங்கள் காரணமாக தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மதுரை ஹைகோர்ட் கிளை தற்போது இந்த மரணம் குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.

என்ன சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர்தான் ஜெயராஜ். இவர் கடந்த 19ம் தேதி லாக்டவுன் நேரத்தையும் தாண்டி கடை வைத்து இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்தன. சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.

மர்ம மரணம்
இந்த சம்பவம் நடந்த போது அங்கு இருந்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் போலீசார் உடன் கடுமையான வாக்குவாதம் செய்தார். இதனால் போலீசார் அவரையும் கைது செய்தனர். அதன்பின் இவர்கள் கோவில்பட்டி கிளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் பென்னிக்ஸ் அங்கே மர்ம மரணம் அடைந்தார்.

அப்பா மரணம்
அதன்பின் நேற்று காலை ஜெயராஜும் ஜெயிலேயே மர்ம மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் பிரேத பரிசோதனை இன்று செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் வணிகர்கள் என்பதால் தமிழ்நாடு வணிகர் சங்கம் கடும் கொந்தளிப்பில் உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தமிழகம் முழுக்க கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கொலை இருவரும்
பெனிக்ஸ், ஜெயராஜ் இருவரும் மர்ம மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதை கண்டிப்பாக தட்டி கேட்க வேண்டும். உடனே அந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எதிர்த்து நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க போகிறோம். இதை கண்டித்து நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications