Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் சாமி.. சத்யா ம்மா.. திரும்ப வந்துருடா, ஐயோ கீறி வெச்சிருக்காங்களே".. தகன மேடையில் கதறிய தாய்மாமா

சத்யாவின் சடலத்தை தகனமேடையில் வைத்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யாவின் சடலத்தை அடக்கம் செய்ய மனமின்றி அவரது குடும்பத்தினர் வெடித்து கதறிய காட்சி காண்போரை கண்ணீர் சிந்த வைத்தது.

பரங்கிமலை சத்யாவின் கொலை, தமிழக மக்களை உலுக்கி எடுத்துவருகிறது.. ஒருதலை காதல் தொல்லையால், சத்யா பலியாகி உள்ளார்..

ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்துள்ளார் சதீஷ்.. இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது.

இடுகாடு

இடுகாடு

இதையடுத்து தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்தனர்.. இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்படவில்லை, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறினர்..

 தாய்மாமா

தாய்மாமா

கடந்த 2 நாட்களாகவே இதுகுறித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.. கொலை செய்த சதீஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த துயர சம்பவங்களை கண்டு தமிழக மக்களும் உறைந்து போயுள்ளனர்.. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், சத்யாவின் மரணத்துக்கு நீதியும் கேட்டு வருகின்றனர்.. சத்யாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்... ஒரே வண்டியில் அப்பா, மகள் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டது, காண்போரின் இதயத்தை பிழிந்தெடுத்தது..

 தகனமேடை

தகனமேடை

முன்னதாக, சத்யாவின் சடலத்தை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.. குறிப்பாக, சத்யாவின் தாய்மாமா நெஞ்சிலேயே அடித்து கொண்டு அழுதார்.. இடுகாட்டுக்கு ஆம்புலன்சில் வைத்து எடுத்துச் செல்லும்போது, சத்யா சடலத்துக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தவர், "மாமா வந்திருக்கேன்.. எந்திரிடா.. மாமாவை பாருடா செல்லம்.. என்னை விட்டு போயிடாதே" என்று கதறி கொண்டே இருந்தார்.. அதேபோல, தகனமேடையில் சத்யாவின் சடலத்தை கீழே வைத்துக் கொண்டு, எரிக்க மனமின்றி "என் சாமி.. என் அம்மா.. திரும்பி வந்துருடா சத்யா மா..

 விம்மி விம்மி

விம்மி விம்மி

டிரஸ் நல்லாயிருக்கான்னு கேட்பியே.. எவ்ளோ அழகா இருக்கா பாருங்கடா என் குழந்தை.. முகமெல்லாம் தையல் போட்டிருக்கே.. ஐயோ, கீறி வெச்சிருக்காங்களே.. என்னை தவிக்க விட்டு போயிடாதே சத்யா..ம்மா" என்று விம்மி விம்மி அழுதது, சத்யாவின் உறவினர்கள், மற்றும் தோழிகளை நிலைகுலைய வைத்துவிட்டது.. தகனம் செய்ய மனமின்றி அனைவருமே தகனமேடையில் இதயம் வெடித்து அழுதுகொண்டே நின்றனர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+