பொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம்.. "மிருகங்களுக்கு" உச்சபட்ச தண்டனை வழங்குக- சத்யராஜ் ஆவேசம்
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 7 ஆண்டுகளாக 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று சீரழித்து வந்ததாக கடந்த 24-ஆம் தேதி புகார் எழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.

எப்படி மனம் வந்தது
சட்டபடி உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இந்த தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. எப்படி இப்படி ஒரு மனம் வந்தது என தெரியவில்லை.

மிருகங்கள்
என்னுடைய சிறிய வேண்டுகோள் என்னவென்றால், மனநலம் சம்பந்தப்பட்ட பாடத்தை பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அதனால் மட்டும் இந்த மிருகங்கள் மாறிவிடுவார்கள் என நான் நினைக்கவில்லை.

பாடமா எடுக்க முடியும்
இந்த மிருகங்களை தண்டிக்கத்தான் முடியும். திருத்த முடியாது. இவ்வளவு கொடூரமான மனசிருப்பவர்களுக்கு நாம் என்ன வகுப்பெடுத்துக் கொண்டா இருக்க முடியும்?

மனவலி
ஆனாலும் கூட பள்ளியிலேயே அடிப்படை கல்வியாக மனநலம் மருத்துவத்தை கற்பிக்க வேண்டும். இதுபோல் மனபிறழ்வுகளுக்கு காரணம் அவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும் தேவைப்படுகிறது. அதை நோக்கியும் கவனம் செலுத்த வேண்டும். சட்டபடியாக உடனடியாக அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மனவலியோடு கூறிக் கொள்கிறேன் என்று சத்யராஜ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications