90 ஆயிரம் கோடி.. கடன் வாங்கும் சவுதி அரேபியா அரசு.. சல்மான் எடுத்த மிகப்பெரிய முடிவு.. என்ன காரணம்?
சென்னை: சவுதி அரேபியா அரசு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார திட்டங்களுக்காக, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 10 பில்லியன் டாலர் வரை கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் அந்நாடு ஈடுபட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி ஆகும்.
சவுதி நிதி அமைச்சகம், பெரிய வால் ஸ்ட்ரீட் வங்கிகள் உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன மாதிரியான வட்டி கொடுக்க வேண்டும், என்ன கடன் முறையில் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், இது குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை.

கேட்ட கடன் கிடைக்காத பட்சத்தில், விரும்பிய விலையில் கடன் கிடைக்காத பட்சத்திலோ அல்லது சந்தை நிலைமைகள் சாதகமாக இல்லாத பட்சத்திலோ இந்த ஒப்பந்தத்தில் இருந்து சவுதி அரேபியா பின்வாங்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சவுதி அரேபியா கடன் வாங்கும் நாடு அல்ல
பொதுவாக, சவுதி அரேபியா கடன் வாங்கும் நாடு கிடையாது. சவுதி அரேபியா பத்திர விற்பனையின் மூலமே அதிக நிதியை திரட்டி வருகிறது. இந்த கடன்களை முழுக்க முழுக்க வளர்ச்சி திட்டங்களுக்காக மட்டும் சவுதி பயன்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 20 பில்லியன் டாலர் கடனை அந்நாடு திரட்டியுள்ளது. 2017-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கடன் டார்கெட்டை அந்த நாடு எட்டி உள்ளது.
கடன் டார்கெட்
சவுதி நாடு பெறக்கூடிய இது போன்ற கடன்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. எனினும், 2016-ஆம் ஆண்டு முதல் 10 பில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு பெரிய கடன் ஒப்பந்தங்களை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டு உள்ளது. இனி வரும் நாட்களில் இதேபோல் அதிக கடன்களை சவுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டு நிதி அமைச்சகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், அரசாங்கத்தின் நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்று நிதி விருப்பங்களை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் முன்னர் கூறியுள்ளனர். சவுதி அரேபியா அரசு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார திட்டங்களுக்காக, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சவுதியின் வருவாய் குறைகிறது
சென்ற வாரம் சவுதி அரேபியா தனது 2025 பட்ஜெட்டை 65 பில்லியன் டாலராக நிர்ணயித்தது. இது முந்தைய கணிப்பை விட இருமடங்கு அதிகம். அரசாங்கம் செலவினங்களை அதிகரிப்பதாலும், வருவாய் குறைவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மறுசீரமைப்பிற்கு முன், ரியாத் இந்த ஆண்டு சுமார் 37 பில்லியன் டாலர் கடன் வாங்க திட்டமிட்டிருந்தது. இதில் பெரும்பகுதி மூலதன சந்தைகள் மூலமாகவும், சுமார் 30% தனியார் வழிகள் மூலமாகவும் திரட்டப்பட இருந்தது.
எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் அதிக உள்நாட்டுச் செலவினங்கள் காரணமாக சவால்கள் நிலவினாலும், சவுதி அரேபியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் பெரிய ஒப்பந்தங்களை முன்னெடுத்து வருகின்றன. எதிர்வரும் காலங்களில், கச்சா எண்ணையை மட்டும் நம்பி இல்லாமல், மற்ற வழிகளிலும் வருவாய் ஈட்டப்படும் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications