சிறையில் சவுக்கு சங்கர் தொடர் உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு.. உள் மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சவுக்கு சங்கருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை வைத்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார்.

சவுக்கு சங்கர்
இதையடுத்து சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் உணவு எதையும் சாப்பிட மாட்டேன் என்று அவர் மறுத்து வருகிறாராம்.

டிஸ்மிஸ்
சவுக்கு சங்கர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது மற்றும் அவரை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் இந்த உண்ணாவிரதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த காலத்தில் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகவும், போன் உரையாடல்களை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதில் 2008லேயே இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்.

வழக்கு
தற்போது இவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்றதால் மொத்தமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிறையிலும் இவர் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே தற்போது சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. 2 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருப்பதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. சிறை உள்ளேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்க்கு
அவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்ட வைத்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய தண்டனையும் அந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்காத வகையிலும் சட்ட உதவிகளை நாட முடியாத ஒரு சூழலை உருவாக்கி ஒரு தாயாக நான் கூட சந்திக்க முடியாத சூழ்நிலையில் எனது மகன் தள்ளப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது எனது மகன் சங்கருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது இயற்கை நீதிக்கு முரணானது என்று விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications