எஸ்பிஐ வாடிக்கையாளர்களே பிக்சட் டெபாசிட் வச்சிருக்கீங்களா? இந்த தேதியே கடைசி.. உடனே செக் பண்ணுங்க
சென்னை: நிதியாண்டு முடிவடையும் மார்ச் மாதம் நெருங்கிவிட்டாலே சாமானிய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரது கவனமும் வங்கிகளின் பக்கம் திரும்புவது இயல்பான ஒன்றுதான்.. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் என்பது வெறும் தேதி மாற்றம் மட்டுமல்ல, அது நம்முடைய சேமிப்பு திட்டங்களில் ஒரு முக்கியமான விஷயமாகும்.. தற்போதைய நிலவரப்படி, பல முன்னணி வங்கிகள் தாங்கள் வழங்கி வந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன.. அதை பற்றிதான் இந்த செய்தியில் சுருக்கமாக பார்க்க போகிறோம்...!!
சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் அனைத்துமே சாதாரண சேமிப்புத் திட்டங்களை விட சற்றே கூடுதல் வட்டி தரக்கூடியவை.. அதனால்தான், காலக்கெடு முடிவதற்குள் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வங்கிகள் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நிரந்தர வைப்பு நிதி
நீங்கள் ஒரு வங்கியில் நிரந்தர வைப்பு நிதி அதாவது FD வைத்திருக்கிறீர்கள் என்றால், அதன் முதிர்வு காலம் எப்போது முடிகிறது என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்..
ஏனெனில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பல புதிய விதிமுறைகளும் வட்டி விகித மாற்றங்களும் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.. வங்கிகள் தங்களுடைய இலக்குகளை அடைவதற்காக மார்ச் மாதத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அறிவிப்பது வழக்கம்..
எஸ்பிஐ - ஸ்பெஷல் வட்டி
ஆனால் அதே சமயம், சில குறிப்பிட்ட கால அவகாசம் கொண்ட சிறப்புத் திட்டங்கள் இந்த மாதத்தோடு முடிவடையப் போகின்றன.. குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வழங்கி வரும் அம்ரித் கலாஷ் 400 நாட்கள் கொண்ட சிறப்பு வைப்பு நிதி திட்டங்களுக்கு மார்ச் 31 வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதில் மூத்த குடிமக்களுக்கு 7.60% வரையிலும், மற்றவர்களுக்கு 7.10% வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது..
எனவே உங்கள் கையில் உபரியாகப் பணம் இருந்தால், அதை மார்ச் மாதத்திற்குள் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்குப் பின்னாளில் நல்ல லாபத்தைத் தேடித்தரும்..
வங்கிகள் தரும் இந்த செய்திகளை அனைவருமே ஒரு அலர்ட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.. ஒருவேளை உங்கள் சேமிப்பு கணக்கில் பணம் சும்மா கிடந்தால், அதற்கு வரும் வட்டி மிகக் குறைவாகவே இருக்கும்.. அதே பணத்தை சிறப்பு வைப்பு நிதியில் மாற்றினால் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும்..
சேமிப்பு பணம்
ஆனால் இந்த வாய்ப்பு மார்ச் மாதத்தோடு முடிவடையப் போகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. வங்கிகள் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டதால், நீங்கள் வங்கிக்கு நேரில் செல்லாமலேயே செல்போன் ஆப் மூலமாகக்கூட உங்கள் முதலீடுகளைச சரிபார்க்கலாம்.. உங்கள் சேமிப்பு முதிர்ச்சியடையும் நிலையில் இருந்தால், அதை அப்படியே விட்டுவிடாமல் மீண்டும் ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்..
நிதியாண்டு இறுதியையொட்டி வரி சேமிப்புத் திட்டங்களிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.. வருமான வரிச் சலுகை பெற விரும்பும் நபர்கள் மார்ச் 31-க்குள் தகுந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் வங்கிகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கும்..
வரிசேமிப்பு திட்டங்கள்
அதனால் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், இப்போதே உங்கள் வங்கி மேலாளரை அணுகி ஆலோசனைக் கேட்பது நல்லது.. உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்தப் பணம் சரியான வட்டி விகிதத்தில் வளருவதும் முக்கியம்..
மார்ச் மாதம் முடிவதற்குள் நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முடிவு, அடுத்த சில ஆண்டுகளுக்கு உங்கள் சேமிப்பிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.. எனவே விழிப்புணர்வுடன் செயல்பட்டு உங்கள் கடின உழைப்பின் பலனை முழுமையாக அனுபவியுங்கள்..
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications